27 ஏப்., 2020

கலங்க வைத்தவை

#அமெரிக்கா
டான்பரி என்ற ஒரு பகுதியில்
உள்ள மருத்துவமனையில்
மார்ச் 22 ம்தேதி கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டு
சிகிச்சைக்கு சேர்ந்தார்
ஜொனாதன் 32 வயது இளைஞர்
இவரது மனைவி கெய்ட்டி கோயல்ஹோ
இரு பிள்ளைகள் பிராட்டின்&பென்னி
இருபது நாட்களுக்கும் மேலாக
வென்டிலேட்டரில்தான் வாழ்ந்துள்ளார்
ஜொனாதன் இறுதியாக தன் இருப்பை
விலக்கி கொண்டார் கணவர்
நலமுடன் திரும்புவார் என இரு சிறு
தளிர்களோடு காத்திருந்த கெய்ட்டி
அவர் இயக்கம் நின்றுபோன செய்தி
மட்டும் இடியாய் இறங்கியது
கணவரின் பொருட்களை வாங்க
டான்பரி மருத்துவமனைக்கு சென்ற
போது ஜொனாதனின் மொபைல்
கெய்ட்டியிடம் வழங்கபட்டது
அதில் ஆடியோ மூலம் பேசியிருந்தார்
ஜொனாதன் "கெய்ட்டி நான் விரும்பிய
ஒரு சந்தோஷமான வாழ்க்கையை
கொடுத்தாய் குழந்தைகளுக்கு அன்பு
தாயாக இருந்திருக்கிறாய்
நான் சந்தித்த அழகான அன்பான
ஒரு பெண்நீ உன்னை மனைவியாக
அடைந்த நான் அதிர்ஷ்டசாலி
பிராடின் நீ அற்புதமானவன்
பென்னி என் அழகிய இளவரசி
இவர்களுக்கு தந்தையாக இருந்ததில்
நான் பெருமை கொள்கிறேன்
கெய்ட்டி குழந்தைகளை அன்போடு
நீ பார்த்துக்கொள்வாய் என்று
எனக்கு நம்பிக்கையுள்ளது பின்னாளில்
குழந்தைகளையும் உன்னையும்
நேசிக்ககூடியவர் வந்தால் நீ மறுக்க
கூடாது அதையும் நான் மனதார
விரும்புகிறேன் ஐ லவ் யூ கெய்ட்டி....
இந்த ஆடியோ ஒலிபரப்பை கேட்டு
கெய்ட்டி மட்டுமல்ல ஹாஸ்பிடலில்
இருந்தவர்களும் கண்ணீர் சிந்தியிருக்கின்றனர் ஒரு அழகிய
கூட்டை கொரோனா பிய்த்து போட்டு
கடந்து சென்றுவிட்டது .......

நன்றி: சேலம் மா.தனபாலன், முகநூல்.

கருத்துகள் இல்லை: