14 பிப்., 2021

தகவல் நேரம் : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 'டெய்லி பாஸ்'

*சென்னை மெட்ரோ ரயில் ‘'Daily Pass'’ பற்றித் தெரியுமா உங்களுக்கு?*

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் *Daily Pass* என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையில் வழங்கப்படும் *‘'Daily Pass'’* குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்...

சென்னை மெட்ரோ சேவையில் வெறும் *₹ 100* ரூபாய் கட்டணத்தில் 
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம்...

இந்த ‘Daily Pass’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் *₹ 150* ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். ஒரு நாள் முழுவதும் இந்த *'‘Daily Pass’'*-ஐ பயன்படுத்திச் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் *₹ 50* ரூபாய் திருப்பி அளிக்கப்படும்...

மேலும் இந்த *'‘Daily Pass’'*-ஐ யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை...    உங்களது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம்...!!!

இதுவே பேருந்து *'‘Daily Pass’'*-ஐ- வாங்கியவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

*மற்றவர்களும் அறிய பகிரலாமே...!*👍👍😊

நன்றி! 

கருத்துகள் இல்லை: