30 மே, 2020

இந்தியாவில் தொற்று மற்றும் இறப்பு விகிதம்

இந்தியாவில் கொரோனா. 

Dr. கோ. பிரேமா MD(Hom),

ஒரு லட்சத்தில் , கொரோனா உறுதியானவர்கள், மற்றும் மரணங்களை பல்வேறு நாடுகளோடு ஒப்பிடும் இந்த படங்கள் உணர்த்துவது ஒன்றுதான். 

இந்தியாவில் கொரோனாவிற்கான நடவடிக்கைகளில் நாம் தன்னிச்சையான முடுவுகள் எடுக்கலாம். 

அமெரிக்கா போல, இத்தாலி போல என நம் மரபணு, உணவு, நுண்ணுயிரிசூழ்மம் எதிலும் பொருத்தமில்லாதவர்களோடு நமது ஆரோக்கியத்தை ஒப்பிடுவது தவறு. 

ஊரடங்கு இதை சாதித்தது என சொல்வதற்கு முன், குறைந்தபட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சிந்தித்து பார்க்கவும். 
ஊரடங்கு என்றோ பொய்த்துவிட்டது இந்தியாவில். 

ஆனாலும் கொரோனா எண்ணிக்கை,மரணங்கள் மிக குறைவு. 

காரணங்கள்:
1. நம் தனித்துவமான மரபணு
2. நமது உணவு கலாச்சாரம், இஞ்சி பூண்டு, சிறு வெங்காயம், துளசி, மஞ்சள், மிளகு, போன்றவை நமது அன்றாட உணவில் உள்ளது. 
3. நமது தட்பவெட்பநிலை. 
4. பட்டினியும் கடின உடல்உழைப்பும் பழகிப்போன பெரும்பான்மை இந்தியா.
5. நமது நுண்ணுயிர்சூழ்மம் புழக்கம். பெரும்பான்மை தொழில்கள் நுண்ணுயிர்களோடு. 
6. ஃப்ளு தடுப்பூசி , நிமோகாக்கல் தடுப்பூசி போன்ற சுவாசநோய்களுக்கான தடுப்பூசிகள் போடும் வழக்கம் இங்கே மிகவும் குறைவு. முக்கியமாக பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் பழக்கமே இங்கு இல்லை. 
7. இந்தியாவின் மரபு மருத்துவங்களும், ஓமியோபதியும் ,பல நல்ல மருத்துவர்களின் துணிவால் கணிசமான மக்களுக்கு சென்றடைந்துள்ளது. 

இனியும் உலகசுகாதாரமையம் சொல்லும் ஒற்றை கலாச்சார மனோபாவத்திலிருந்து இந்தியா தனக்கு தகுந்த கொரோனா நடவடிக்கைகளை யோசித்து முடிவு எடுக்கவேண்டும். 

படங்களுக்கு நன்றி: Dr. Srinivasa Ragavan

நன்றி: Dr ஜி.பிரேமா & முகநூல்.

கருத்துகள் இல்லை: