29 மே, 2020

நூல் நயம்


புத்தகத்தின் பெயர் - மறைக்கப்பட்ட இந்தியா, எனது இந்தியாவின் பார்ட் 2 

எழுத்தாளர் - எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா) 

பதிப்பகம் - தேசாந்திரி 

வெளியான வருடம் - டிசம்பர், 2018 

லாக் டவுனில் நான் படித்த ஐந்தாவது புத்தகம். இந்த புத்தகமும் இந்த வருடம் புத்தக கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகத்தில் வாங்கியது. இந்த புத்தகம் ஜூனியர் விகடனில் தொடராக வந்தவையின் தொகுப்பு. 

நாம் ஒவ்வொருவரும் வரலாற்றில் நிறைய நிகழ்வுகளை நம் நண்பர்களுடன் பேசும் போது பேச்சு வழக்கில்  பேசி பேசி தெரிந்து வைத்து இருப்போம். சிலவற்றை youtube மூலம் விடியோகள் வழியாக பாத்து தெரிந்து வைத்திருப்போம்.  

அவற்றில் சில நிகழ்வுகள் நமக்கு மிகவும் இன்டெரெஸ்டிங் ஆகவும் படிக்கவும் தூண்டுதலாக இருக்கும். ஆனால் எந்த புத்தகத்தை படிப்பது / எந்த விடியோவை பார்த்து அந்த நிகழ்வை பற்றி இன்னும் தெரிந்து கொள்வது என்று நமக்கு தெரியாயது.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நேதாஜி என்ன ஆனார், ராஜிவ் கொலை வழக்கு, operation ப்ளூ ஸ்டார் இப்படி பல விஷங்களை அடிக்கி கொண்டே போகலாம். இதை எல்லாம் பற்றி கண்டிப்பாக நாம் ஒரு முறையாவது நம் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்திருப்போம். 

அப்படி வரலாற்றில் நாம் இத்தனை வருடம் தெரிந்து கொள்ள தவறவிட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள் இதில் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர்.  நிச்சயம் இதில் பல surprise உங்களுக்கு படித்தால் காத்திருக்கு. 

அது போக, "வெள்ளைக்காரன் இந்நேரம் இருந்து இருந்தால் நமக்கு இன்னும் எவ்வளவு நன்மை நடந்து இருக்கம் தெரியுமா??" என்று நமக்குள் எத்தனை முறை பேசி இருப்போம். அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார். 

அது போக டாக்கா முஸ்லின் கதை, இந்திய பருத்தியின் அழிவு, ரகசிய / ஆசாத் ரேடியோவின் வரலாறு, டாடாவின் கதை, நேதாஜியின் இறுதி நேரம், நேதாஜி உருவாக்கிய டோக்கியோ கேடெட்ஸ், சாந்தி நிகேதன் ஆரம்பம் ஆனது, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, நுண்ணோவியங்கள் / கல்லாயுதங்கள், இந்தியாவில் அர்மீர்னியர்கள், காலிஸ்தான் வன்முறை (தற்போதைய பஞ்சாப்,     ஹிமாச்சல், ஹரியானா), பொற்கோயிலுக்குள் ராணுவம்,  காந்திக்கு முந்தைய மகாத்மா, நாயர் / வேரேந்திரநாத் சட்டோபாத்யாய, மணமகனுக்கு வலை வீசிய கப்பல்கள் / திருமண வேட்டை, நமது தேசிய கொடி அமைந்த வரலாறு, காந்தி - தாகூர் உறவு, பிரம்மோ சமாஜ் / ஆரிய சமாஜ் என்று நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளாளர். 

இதெல்லாம் நாம் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு பொக்கிஷங்கள். தேடி தேடி நாம் படிக்க ஆசைப்பட்ட அனைத்தும் இதில் அடக்கம். அனைவரும் படிக்க வேண்டிய நூல். 

வரலாறு முக்கியம் அமைச்சரே!

நன்றி: திரு ஆனந்த் கோவிந்தராசு, வாசிப்பை நேசிப்போம், முகநூல்.

கருத்துகள் இல்லை: