31 ஜன., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1032: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

விளக்கம்:

பாடல் #1031 இல் உள்ளபடி தமக்குள் அறிந்து கொண்ட இறை சக்தியானது உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கின்றது. நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரத்திலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக் கொண்டு சென்று தலை உச்சியில் இருக்கும் எழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலந்துவிட்டால் சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்து கொள்வார்கள்.

மனமார்ந்த நன்றிகள் :

கருத்துகள் இல்லை: