திருமந்திரம் - பாடல் #1031: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
அந்தமில் லானுக் ககலிடந் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.
விளக்கம்:
பாடல் #1030 இல் உள்ளபடி நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறை சக்தியானது அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கின்றது. அந்த சக்தியின் அளவை அளக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை. அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு எதுவும் இல்லை. முடிவில்லாத இந்த இறைசக்தியை நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்து கொள்ளலாம்.
மனமார்ந்த நன்றிகள் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக