29 ஜன., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1030: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எடுக்கின்ற பாதங்கண் மூன்றெழு கையுங்
கடுத்த முகமிரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணு நாவேழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

விளக்கம்:

நவகுண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் வெளிச்சம் சத்தம் காற்று ஆகிய மூன்றும் கைகளாக எழுகின்றது. இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் கூர்மையான முகங்களாக இருக்கின்றது. ஆறு சக்கரங்கள் கண்களாக இருக்கின்றது. இதன் மூலம் உடலை குண்டமாக வைத்து நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை விடாமல் ஓதி உச்சரித்து மூலாதாரத்திலுள்ள குண்டலினியை ஆறு சக்கரங்களுக்கும் மேலெழுப்பிச் செல்லும் போது அந்த சக்கரங்களில் வீற்றிருக்கும் முடிவில்லாத இறை சக்தியை அறிந்து கொள்ளலாம்.

.மனமார்ந்த நன்றிகள் :

கருத்துகள் இல்லை: