திருமந்திரம் - பாடல் #1045: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.
விளக்கம்:
மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றது. இந்த வடிவங்களும் வடிவங்கள் இல்லாமலும் திருபுரை இருக்கின்றது.
குறிப்பு: பாடல் #401 இல் உள்ளபடி அசையும் சக்தியின் மையத்திலிருந்து தோன்றிய திரிபுரை எந்தெந்த வடிவங்களாகவும் வடிவம் இல்லாமல் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் அறியலாம்.
திரிபுரையின் ஆறு மந்திர வடிவங்கள்:
மாமாயை - வினைகள் இல்லாத சுத்த மாயை
மாயை - வினைகளோடு இருக்கும் மாயை
வயிந்தவம் - மாயையால் குழம்பி இருக்கும் ஞானசக்தி
வைகரி - முறைப்படி சத்தமாக கேட்கும் ஒலிவடிவம்
ஓமாயை - மாயையால் மறைக்கப்பட்ட பிரணவம்
உள்ளொளி - மாயையால் உருவான வெளிச்சமும் சத்தமும்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக