22 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1043: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

விளக்கம்:

பாடல் #1042 இல் உள்ளபடி கோடி யுகங்களாக நிலைத்திருக்கும் உடலைப் பெற்ற சாதகர் யோகியாகிறார். அந்த யோகி நவகுண்டமாகிய தமது உடலுக்குள் இருக்கும் ஒன்பது வகையான குண்டங்களிலும் தாமாகவே அக்னி எழுப்பிக்கொண்டே இருக்கின்றார். கரு உற்பத்திக்கு உயிர்சக்தி கருவியாகப் பயன்படுவதைப் போல இறையருளை தமக்குள் கண்டுகொண்ட யோகியின் நவகுண்ட உடலை உலகம் தனது நன்மைக்கு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

கருத்து: கோடி யுகங்கள் இருக்கும் யோகியின் மேன்மையான உடலை உலகம் தனது நன்மைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

மனமார்ந்த நன்றிகள் :

கருத்துகள் இல்லை: