28 ஜன., 2022

நூல்மயம் : ஐந்து வருட மௌனம் - எஸ்ரா



எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து -
ஐந்து வருட மௌனம்

அறிவிப்பு
இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதைத் தொகுப்பு

இதில் 25 சிறுகதைகள் உள்ளன. 350 பக்கங்களுக்கும் மேலாக உள்ள சிறுகதைத்தொகுப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகிறது

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது

இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

இன்று சில தகவல்கள் : திருமண நாள் பார்க்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்

திருமண நாள் பார்க்கும்போது பின்பற்ற வேண்டிய
பதினோரு முக்கிய
விதிகள்!

அரிய ஆன்மீக தகவல்!

தனது மகன் அல்லது
மகளின்
திருமணத்திற்கான நாள்
பார்க்கும் பெற்றோர்கள்
மற்றும் பெரியவர்கள்
கவனத்தில் கொள்ள
வேண்டிய முக்கியமான
பதினோரு (11)
விதிகளை நமது முன்னோர்கள்
வகுத்துள்ளனர். 
.
இந்த விதிகளின் படி
திருமணத்தை
நிச்சயத்தால், மணமக்கள்,
சகல சௌபாக்கியங்க
ளோடு, குழந்தைப்பேறு
பெற்று வாழ்வார்கள்
என்பது நம்பிக்கை .

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில்
இடம்பெறக்கூடாது. (மல
மாதம் என்பது இரண்டு
அமாவாசை அல்லது
இரண்டு பவுர்ணமி ஒரே
மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி,
ஆனி, ஆவணி, தை,
பங்குனி தவிர இதர
மாதங்களில் திருமணம்
செய்வதைத் தவிர்ப்பது
நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச
காலத்திலேயே
திருமணம் செய்வது
நல்லது என்பது
மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன்,
வெள்ளிபோன்ற சுப
ஆதிபத்தியமுடைய
கிழமைகள் மிக ஏற்றவை.
இதர கிழமைகள்
அவ்வளவு உகந்தவை
அல்ல. …ரிஷபம்,
மிதுனம், கடகம், சிம்மம்,
கன்னி, துலாம், தனுசு,
மீனம் ஆகிய சுப
லக்கினங்களில் மட்டுமே
திருமணம் நடத்த
வேண்டும் என்பது தான் நான்காவது விதி

5.ஐந்தாவது விதி:
துவிதியை, திரிதியை,
பஞ்சமி, ஸப்தமி, தசமி,
திரயோதசி ஆகிய சுப
திதிகள் தவிர இதர
திதிகளை தவிர்ப்பது நல்லது.

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு
7ம் இடம்,முகூர்த்த
நாளன்று சுத்தமாக
இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம்,
மிருத்யூ பஞ்சகம்,
கசரயோகங்கள் போன்ற
காலகட்டத்தில் திருமணம்
நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது
குரு, சுக்கிரன் போன்ற
சுபகிரகங்கள் திருமண
லக்கினத்துக்கும்
மணமக்களின் ஜனன
ராசிக்கும் எட்டாம் வீட்டில்
இடம்
பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள்
மணமக்களின்
சந்திராஷ்டம தினமாக
இல்லாமல் இருப்பது
மிகமிக முக்கியமான
விதி.

10. பத்தாம் விதி
மணமக்களின் ஜனன
நட்சத்திர நாளிலும் 3, 5, 7,
12, 14, 16, 21, 23, 2வதாக
வரும் நட்சத்திர
தினங்களிலும்
திருமணம்
நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின்
பிறந்த தேதி அல்லது
கிழமைகளிலும்
கல்யாணம் பண்ணக்
கூடாது.

இவ்வளவு விஷயங்கள்
தெரிந்து கொண்ட பின்
நீங்களே அனைத்து
சுபகாரியங்களுக்கும்
நல்லநாள் பார்த்து விடு
வீர்கள் தானே. 

அவரவர் குலதெய்வத்தை 
மனதில் வேண்டிக் கொண்டு
உங்கள் வீட்டில் உள்ள
பெரியவர்களின்
ஆசியுடன் நல்லதொரு
நாளைக் குறியுங்கள்.

குட்டிக்கதை : பெண்மை போற்றுதும்!

பெண்மை போற்றுதும்!

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...!!!

 இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன். 
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
#இது_ராமாயணம்

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன்.மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான். அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
#இது_நளாயினிகதை.

இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்...
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - 
#இது_சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான். 
#இது_மணிமேகலை

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று. 
யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், 
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று. "அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள்.  முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். 
#இது_குண்டலகேசி

இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள். 

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள். தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம். 
சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்..

கவிதை நேரம் : அகன்று விரிந்த வானின் கீழ் - தேவதேவன் கவிதை

*அகன்று விரிந்த வானின் கீழ்*

தேவதேவன் கவிதை
 

அகண்டு விரிந்த வானின்கீழெ
அத்துணை அகண்ட பேரெழிலுடன்
யார்
ஏன்
எதை
இப்படி
ஈரப்புனல்கொண்டு
இதமான சமநிலப் பரப்பினை விரித்த
பெருங்களத்தில் நின்றபடி
வெகு அக்கறையோடு குனிந்து
ஊன்றிக்கொண்டே இருக்கிறார்கள்
வரிசை வரிசையாய்? அணி அணியாய்?
புன்னகையோடு திரும்பிப் பார்த்த அவனைப்
பூரிப்போடு பார்த்த தந்தை
“நாற்று’ என்றார் “நடுகிறார்கள்” என்றார்
“வயல்” என்றார்
மிகப்பரிதாபமான தொனியுடன்
பரவாயில்லை என்பது போன்ற
கனிவும் புன்னகையும் நிறைவும்
பேரளவானதொரு ஆறுதலும் மிளிர
அவர் முகத்தை வருடின
அவன் பிஞ்சுக்கரங்கள்.


நிலக்காட்சி என்ன ஏது என்று தெரியாமலேயே சிறுகுழந்தைகளை ஒருவகை பரவச நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அவை நிலமே தாங்கள் என்னும் இரண்டின்மையை அடைகின்றன. என் சிறுவயதில்- எனக்கு ஒருவயதுதான் இருக்கும் என நினைக்கிறேன், பிறர் தூக்கிச் செல்லும் வயது- அப்படி ஒரு மாட்டுவண்டியில் அமர்ந்து ஓர் ஆற்றில் இறங்கும்போது அடைந்த முழுமையனுபவம் இன்றும் நினைவிருக்கிறது. ரப்பர் நாவலில் அந்தக் காட்சி அப்படியே பொன்னுமணி பெருவட்டரின் அனுபவமாக வரும்
 
இக்கவிதையில் அகண்ட [ துண்டாடப்படாத, முழுமையான என்னும் பொருள்கொண்ட சொல்] நிலத்தைப் பார்த்து விதிர்த்து நின்றிருக்கிறது குழந்தை. அப்போது அதன்மேல் ஒருவர் உழுது நடவுசெய்வதை காண்கிறது. நிலவெளி வயல்பரப்பாக உருமாறுவதைக் காண்கிறது. துண்டாடப்பட்டு கண்டமாக்கப்பட்டு. அது அறியும் முதல் வாழ்க்கைத்தரிசனம் அல்லவா அது? பரவாயில்லை என்று சொல்லி அவரை ஆறுதல்படுத்துகிறது குழந்தை.

ஆன்மீக சிந்தனை

உடல் நலம்

   உடல், உயிர், மனம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாதன.
இம்மூன்றும் நலமாக இருக்க உடல் நலம் வேண்டும், உயிரின் இணக்கம் வேண்டும், மனவளம் வேண்டும். "நோயறற் வாழ்வே குறைவற்ற செல்வம்" என்கிறார் அவ்வை.

   மனிதன் எப்போதும் இன்பத்தையே விரும்புகிறான். இன்பத்தை உடலால்தான் அனுபவிக்கிறோம். உடல் நலத்துடன் இருந்தால்தான் இன்பம் நிலவும். உடல் நலம் குன்றினால் துன்பந்தான். எனவே நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வத்தை அனைவரும் விரும்புகின்றனர்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே  ....திருமூலர்

மனித உடல் இயங்குவதற்கு உயிர்ச்சக்தி மூலகாரணமாக உள்ளது. உயிர்ச்சக்தி தங்கும் பாத்திரம்போல் உடல் அமைந்துள்ளது.

    மனித உடல் ஐந்து அடுக்குகள் இணைந்து  இயங்கும் ஒரு நிலையம். அவை விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகும். இவற்றினைப் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முதல் பெளதிகப் பொருளான விண்களின் கூட்டே மற்ற நான்கும். விண் என்பது தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கும் சிரிய துகள்.
உயிரினங்களில் விண்துகள் உயிர் என அழைக்கப்படுகிறது. மனித உடலில் நிலம் எலும்பாகவும், சதையாகவும், நீர் ரத்தமாகவும், நெருப்பு உடற் சூடாகவும்,
காற்று மூச்சாகவும், விண் உயிர் ஆற்றலாகவும் உள்ளன.  இதையே

      பரமாய சக்தியில் பஞ்சமா பூதம்
      தரம் மாறித் தோன்றும் பிறப்பு
      நிலம் ஐந்து நீர் நான்கு நீடங்கி மூன்று
      உலவை யிரண்டொன்று விண்
என்று அவ்வைக் குறள் கூறுகிறது.

   நீர் நிலத்தை விட லேசானது. நெருப்பு நீரை விட லேசானது. காற்று
நெருப்பை விட லேசானது. விண் என்ற உயிர்த் துகள் காற்றை விட லேசானது.

உடல் நலமாக் இருக்க, உடலுக்கும், உயிருக்கும் இடையே ஓர் இணக்கம் தேவை.

உறவு சரியாக இருக்க வேண்டும். நட்பு சரியாக இருந்தால்தான் உடல் நலமாக
இருக்கும்.

உடலுக்கும், உயிருக்கும் பிணக்கு ஏற்பட்டால் நோய். உடலுக்கும்,
உயிருக்கும் நட்பு ஏற்பட்டால் வாழ்க்கை. உடலுக்கும், உயிருக்கும் பிரிவு
ஏற்பட்டால் மரணம்.     
               
வாழ்க வளமுடன்.

இரா.ஆனந்தன்
உடல் நலம் பெற உடற்பயிற்சி, மன வளம் பெற தியானம், உயிர் நலம் பெற
காயகல்பப் பயிற்சி பெற்று உயருங்கள்

இலக்கிய இன்பம்

புறநானூறு செய்யுளும் பொருளும்

184. பாண்டியன் அறிவுடை நம்பி

காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அதுபல நாளுக்கு வரும்.

நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்.

அறிவுடை வேந்தன் நெறி வகுத்துக் கொண்டு அதன்படி மக்களிடம் பொருள் பெற்று ஆட்சி நடத்தினால் அந்த நாடு கோடிப் பொருளினை ஈட்டித் தந்து நன்கு செழித்து உயரும்.

சிற்றினத்தாரோடு சேர்ந்து இன்பக் கேளிக்கைகளை விரும்பித் தவறான வழியின் மக்களிடமிருந்து பொருளை வற்புறுத்திப் பெற்றால் யானை புகுந்த வயல் போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடும்.

*காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும், அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து, நாடு பெரிதும் நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான், உலகமும் கெடுமே*.

திணை - பாடாண் திணை, துறை - செவியறிவுறுஉ *பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது*.

நலக்குறிப்புகள் : சளி

*சளி*

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

கருணை உள்ளமே...

படத்தில் நீங்கள் பார்ப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; இவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்று இவர் இருக்கும் இடம் தெரிந்தால் மேலும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!

அலோக் சாகர் இவரது பெயர். ஐ.ஐ.டி டெல்லியில் படித்து பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அதன்பின் புகழ்பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எச்.டி என்னும் முனைவர் பட்டம் பெற்று ஐ.ஐ.டி பேராசிரியராகப் பணிபுரிந்தும் வந்தார். ஒருநாள் திடீரென அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு புறப்பட்டுவிட்டார். அவர் வந்தடைந்த இடம் 750 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம்!

ஆம்... கடந்த 35 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பழங்குடி இன மக்கள் வசிக்கும்  கிராமத்தில் வசித்து வருகிறார்; மேலும் அங்கு வாழும் மக்களுக்கு சேவை செய்தும் வருகிறார்.
சுற்றியுள்ள எல்லா பழங்குடியின மக்களின் மொழிகளையும் இவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இவருடைய முன்னாள் மாணவர். அவரைப் போன்று இன்று புகழ் பெற்று விளங்கும் பலரும் இவரிடம் பயின்றவர்கள்.

ஐஐடி வேலையை ராஜினாமா செய்ததும் மத்தியபிரதேசத்தில் உள்ள பேட்டுல் மற்றும் ஓசங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடி கிராமங்களில் முதலில் பணி செய்ய ஆரம்பித்த அவர் தன் இருப்பிடமாக ஒரு சின்னம் சிறு குடிசையை கொசாமு என்கிற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் ஏற்படுத்திக் கொண்டு வசிக்க ஆரம்பித்துவிட்டார்.

அங்குள்ள பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இருக்கிறார். கிராமவாசிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கி மரம் நடுவதற்கு ஊக்கப்படுத்துகிறார்.

"நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர மக்கள் பாடுபட வேண்டும். இங்கு அறிவை பெருக்குவதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தான் மக்கள் தங்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்களே தவிர கஷ்டப்படும் ஏழை மக்களின் துயர் துடைப்பதில்லை" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய பின்புலம் பற்றி மக்கள் முதலில் அறியவில்லை. ஒரு தேர்தலின் போது தான் இவரைப் பற்றிய உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிய வந்து இருக்கிறது. அது வரை மக்களோடு மக்களாக ஒரு எளிய வாழ்க்கை முறையைத் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலே வாழ்ந்து வந்தார்.

சாகர் டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரியும் போது கிராமப்புற மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். மாணவர்களிடம் இது குறித்த அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். விவசாயிகளின் துயர் துடைக்கத் தானே களத்தில் இறங்குவது என முடிவு செய்த அன்றே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

விவசாயம் செய்ய இயலாத மக்களுக்கு விதை நெல்களை இலவசமாகக்  கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இவரை வீட்டிற்குப் போகும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் சாகர் அதை மறுத்து விட்டார்.

இவரது தந்தை ஐ.ஆர்.எஸ். அலுவலராக இருந்தவர் 2015- இல் மரணித்து விட்டார். தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்; தம்பி ஐஐடி டெல்லியில் பேராசிரியர். இன்று 69 வயதாகும் இவர் தினசரி 60 கிலோமீட்டர் கிராமங்கள்தோறும் சோர்வில்லாமல் பயணித்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

“கல்வி என்பது சக மனிதரின் துன்பத்தைப் போக்குவது மற்றும் எளிய மக்களுக்குச் சேவை செய்வதே” என சாகர் அடிக்கடி கூறுவதுண்டு. "தொழில்நுட்ப வளர்ச்சியோ, பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியோ ஏழைகளைச் சென்றடைவதில்லை. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும்" 

எளியவர்களைக் காப்போம் என வெற்றுக் கூச்சலிடுவோர் மத்தியில் சாகர் ஒரு மகத்தான மனிதர். அவரிடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு சைக்கிள், மூன்று ஜோடி உடைகள் மட்டுமே. கல்வி என்பது வியாபாரப் பொருளென மாறிவிட்ட நிலையில் இம்மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். ஆனாலும் ஏழைகளை, வறுமையில் வாடுபவர்களை நாம் நினைத்தால் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சாகரின் வாழ்க்கையே சான்று!

நன்றி :

வானகத்தில் பயிற்சி முகாம்

சிரிப்புத்தான் வருகுதையா

சிரித்து வாழவேண்டும்

இன்றைய குறள்

ஆன்மீகம் : கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

ஓமைக்ரானுக்கு ஹோமியோபதி மருந்து

27 ஜன., 2022

அபூர்வமான படம்

ஆன்மீக சிந்தனை : கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

இன்றைய குறள்

சிரிப்புத்தான் வருகுதையா!

இன்று சில தகவல்கள்

ஆன்மீக அறிவியல்

வானகத்தில் பயிற்சி முகாம்

வானகத்தில் பயிற்சி முகாம் 

26 ஜன., 2022

25 ஜன., 2022

சிரிக்கவும் சிந்திக்கவும்

நலக்குறிப்புகள் : தேங்காய்ப்பால்

சிரித்து வாழவேண்டும்!

பக்தி மஞ்சரி : கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

இயற்கை உணவு

இன்றைய குறள்

உங்கள் கவனத்திற்கு

மக்கள் குரல்