3 அக்., 2008

சித்தர் பாடல்கள்-1: "மோகமென்ற உரலுக்குள்..."

மோகமென்ற உரலுக்குள் மனந்தான் சிக்கி
முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான்

பாகமென்ற கோபம் வந்தே உருவாய் நின்று
பதையாமற் தன்னிச்சே உலகம் எல்லாந்
தாகமென்ற ஞானம் வந்தென்ன செய்யும்?
சண்டாள இந்திரியச் சார்பி னாலே
வேகமேன்ற மனலகரி யைத்தான் கொண்டு
விண்ணுக்குளே நிற்க வெளியாய்ப் போமே.

- கைலாயக் கம்பளிச் சட்டை நாயனார்

1 கருத்து:

kovai sathish சொன்னது…

"நாபிளக்க பொய் உரைத்து
நவநிதியம் பல தேடி...
நலன் ஒன்றும் அறியாத
நாரியரை கூடி..
பூ பிளக்க வருகின்ற
புற்றீசல்போல
புலபுலேன கலகலென
புதல்வர்களை பெறுவீர்..
காப்பதற்கும் வகையறியீர்...
கைவிடவும் மாட்டீர்...
ஆப்பதனை அசைத்திட்ட
குரங்கதனைபோல்
அகப்பட்டீரே..கிடந்துழல
அக பட்டீரே..!!"


"நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சூடியே..
சுற்றி வந்து சொல்லும் மந்திரம் ஏதடா..?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள் இருக்கையிலே..
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ..?

இந்த சித்தர் பாடல்களும்..இணைப்பாக..!!?