பீஹார் மாநிலத்தில், ஆறு குடும்பத் தலைவிகள் சேர்ந்து, 'ஷமத்' என்ற இணைய நாளிதழை, பீஹாரின் பழைமையான, 'மைதிலி' மொழியில் ஆரம்பித்துள்ளனர்.
பீஹார் என்றாலே அடிதடி, கொள்ளை, கொலை, கடத்தல் அதிகம் நடக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை நீக்க, சாதகமான செய்திகளை வெளியிட்டு, பீஹாருக்குப் பெருமை சேர்ப்பதுதான் எங்கள் ஆன்-லைன் நாளிதழின் நோக்கம் என்கின்றனர் இந்தப் பெண்கள்.
குமுத் சிங், ப்ரீதிலதா மாலிக், மம்தா சங்கர், சுஷ்மா, சவ்வி ஆகிய ஐந்து பெண்கள் மற்றும் அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத இன்னொரு பெண்ணும்தான் இந்தப் பத்திரிக்கையை நடத்துகின்றனர். இவர்களுக்குப் பின்னணியில் இருந்து மேற்பார்வையிடுவது குமுத் சிங்கின் கணவர் ஜா. இவரும் ஒரு பத்திரிக்கையாளரே. - ஜோல்னா பையன்.
நன்றி: தினமலர், வாரமலர், செப்டம்பர் 2008 & ஜோல்னா பையன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக