இன்று சர்வதேச கை கழுவும் தினம். இதையொட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்ற ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு கட்டளைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது:
1. பள்ளியில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க மாணவர்கள் அடங்கிய குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அடுத்த ஆண்டிற்கான சுகாதாரச் செயல்களை திட்டமிட ஒரு சிறப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
3. பள்ளி அறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யவேண்டும்.
4. மதிய உணவுக்குமுன் அனைவரும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
5. திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம், கழிவறையை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.
6. சாப்பிடுவதற்கு முன்பும், மலம் கழித்த பின்னும் கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
7. சோப்பைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவுவது மற்றும் மலம் கழிக்க கழிவறைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். சுத்தமான கைகளே ஆரோக்கியத்தின் அடையாளம் என்ற விழிப்புணர்வுக் கையேடு யுனிசெப் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் இதைப் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தவேண்டும்.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 16, 2008.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக