7 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-24: "அடம் பிடிக்கும் மனசு"

குளக்கரையில்,
வெளி மண்டபத்தில்,
புறச்சாலையில்,
புளிய மரத்தடியில்
ஆட்களே இல்லாத
புகைரத நிலையத்தில்,
இருபத்தைந்தாண்டுகள்
பின்னோக்கி ஓடி,
அமர்ந்து, வர மறுத்து
அடம் பிடிக்கும் மனசு.

பதினாறு மணி நேரம்
பயணப்பட வேண்டும்;
செய்யாது விட்ட
இரண்டு நாள் வேலைகள்
வரிசைகட்டி நிற்கும்;

வந்தாச்சு, பார்த்தாச்சு,
வாங்கிக்கொடுத்தாச்சு,
அம்மாவின் தேவையெல்லாம்.

கிளம்பலாமென்றால்,
கண்கள் ஒரு புறமும்,
கால்கள் மறுபுறமும் இழுக்க,
இரண்டிற்கும் இடையே
அலைபாயும் மனசு.

கருத்துகள் இல்லை: