வல்லபை கணபதி
வாக்(கு) தேவி
வால்ட் விட்மன்
வாகையடி அம்மன்
துணை.
அப்பாவிப் பையன்
அசட்டுப் பையன்
கற்க கற்க
கள்ளம் கற்க
அங்கே போ
இங்கே போ
எங்கேயும் போ
கால் போனபடி.
சுற்று, சுற்று
பொறுக்கு, பொறுக்கு
கிடைத்ததெல்லாம்
பொறுக்கு.
நல்லது, கெட்டது
கண்டது, கழியது
குப்பை, குப்பை
ஒரு வண்டிக்குப்பை
இல்லையில்லை
பல வண்டிக்குப்பை!
பள்ளியில் கொஞ்சம்
பாதியில் கொஞ்சம்
ஆட்டம், பாட்டம்
திருதிரு முழி
திருதிரு முழி
படி, படி, படி, படி
புத்தகம், புத்தகம்
புத்தகம், புத்தகம்
சினிமா, சினிமா
சாப்பாடு, சாப்பாடு
அந்த ஊர்
இந்த ஊர்
எத்தனையூர்!
புத்தக மூட்டை
புழுகு மூட்டை
அழுக்கு மூட்டை
அறிந்த மூட்டை
அறியாத மூட்டை
குழப்ப மூட்டை
எத்தனை மூட்டைகள்!
தூக்கு, தூக்கு
ஓடு, ஓடு
வேலை, வேலை
ஐயோ வேலை!
தம்பி படி
தங்கை படி
கல்யாணங்கள்
கச்சேரிகள்
கடலை மிட்டாய்கள்
சோதனைகள்
பரிசோதனைகள்
மன்றங்கள்
மனிதர்கள்
மருத்துவங்கள்
மனக்குழப்பங்கள்
உலகங்கள்
உதைகள்
ஊர் சுற்றும் வாய்ப்புக்கள்
திட்டங்கள்
தீட்டல்கள்
அனுபவங்கள்
ஆச்சரியங்கள்
கற்றல்கள்
கதறல்கள்
எத்தனை படலங்கள்!
கற்ற படலம்
கனவுப் படலம்
காய்ந்த படலம்
விற்ற படலம்
வேஷப் படலம்
வேதனைப் படலம்
நட்புப் படலம்
நாடகப் படலம்
புத்தகப் படலம்
புரியாத படலம்
குடும்பப் படலம்
குசேலப் படலம்
குழப்பப் படலம்
தனிமைப் படலம்
தடுமாறும் படலம்
நடுவில் -
நீ யார் பெண்ணே?
சரி, சரி, வா, வா.
நட, நட
வேகமாய் நட
கட்டில், தொட்டில்
சுட்டிப்பொண்ணு
குட்டிப்பையன்
கொஞ்சல்கள்
குலாவல்கள்
போதும், போதும்
கடன்கள்
கவலைகள்
கழுத்தறுப்புகள்
காயங்கள்
இங்கே கடன்
அங்கே கடன்
ஒளிஞ்சுக்கோ
ஒளிஞ்சுக்கோ
புத்தகத்தில்
ஒளிஞ்சுக்கோ
படி, படி
நிறையப் படி
கதைகள்
கவிதைகள்
கட்டுரைகள்
காவியங்கள்
அறிவுத்தாகம்
ஆங்கிலமோகம்
புத்தகப் புழு
புத்தகப் பைத்தியம்
எழுது, எழுது
சில்வர் ஃபிஷ்
டாக்டர், டாக்டர்
நண்பர்கள்
நல்லவர்கள்
நயவஞ்சகர்கள்
நாடகங்கள்
நாட்குறிப்புகள்
தேடல்கள்
தேவைகள்
ஏக்கங்கள்
தூக்கங்கள்
பாராட்டுக்கள்
பஞ்சப்பாட்டுக்கள்
ஒட்டல்கள்
உரசல்கள்
மேலே போ
மேலே போ
நோய்கள், நொடிகள்
மருந்துகள், மாயங்கள்
மக்கு, மக்கு
முடி கொட்டுது
மீசை வெளுக்குது
அப்பா டாட்டா
அம்மா நோட்டா?
நீண்ட பயணம்
நெடிய பயணம்
கடவுளைத் தேடு
காசைத் தேடு
நட, நட
வேகமாய் நட
வாங்கல், விற்கல்
வாட்டல், வதங்கல்
வீடு, வாஹனம்
விளையாட்டுப் பொம்மைகள்
தேடு, தேடு
மாப்பிள்ளை தேடு
போய் வா பெண்ணே
போய்வா!
படிடா பையா படி!
பிடிடா வேலை பிடி!
வெள்ளைத் தாள்
வெறித்துப் பார்
கிறுக்கு, கிறுக்கு
முடிந்தவரை கிறுக்கு
அப்புறம் என்ன?
கத்திரிக்காய் காய்க்க
கதை முடிய
கையசைத்து
கடையை மூடிப்
போய் வா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக