8 செப்., 2009

பட்டுக்கோட்டை பாடல்-8: "கண்ணில் கருணை"

உள்ளும் புறமுமாகி ஒளியாகி - ஞான
வெளியாகி நின்ற உமையே!
துள்ளும் கலைகளாகித் துளியாகிக் கடலாகித்
தெளிவாக நின்ற திருவே!

அல்லும் பகலுமாகி அறமாகித் தரமாகி
வளமாகி வந்த வடிவே!
அனுதினமும் உனதுமலரடி இணையில் இணையுமெனை
ஆண்டருள்வாய் அம்மையே!

கையிலே சூலமும் கண்ணிலே கருணையும்
கனிவாயில் அன்பு நகையும்
கொய்யாத மலர்முகமும் குலுங்குநவமணி அழகுங்
கொண்ட தாயே!

மைபோன்ற இருட்டிலே வையகமும் மாந்தரும்
மயங்கும் வேளை
மெய்யிலே அறிவெனும் விளக்கேற்றி வைத்தநீ
விடுதலை வழங்குவாயே!

கருத்துகள் இல்லை: