பேசாது பேசிப் பெரு நல்லறிவுணர்த்தும்
ஆசான் இயற்கையே ஆம்.
இயற்கை நம்மைப்போல வாய்திறந்து பேசுவதில்லை. ஆனால் அதற்கென ஒரு மௌன வாக்கு உண்டு. அதனால் அது தன்னுடன் உள்ளுறவு கொள்ளும் புலவர் உள்ளத்திற் பேசும். அதன் பேச்சானது எழுத்தில் எழுதிய நூல்களைவிடப் பெரிய, நல்ல, உத்தமமான, உயர்வான அறிவை நமக்கு உள்ளார உணர்த்தும், விளக்கும். இவ்வாறு சூக்சுமமாக அறிவாளிக்கும் ஆசிரியன் இயற்கையொன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக