ஒருமுறை காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடந்த கம்பன் விழாவில் கலந்துகொள்ள முனைவர் அறிவொளி அவர்கள் வந்திருந்தார். என்னைப்போல், ஏன் நம்மில் பலரைப்போல், நண்பர் அலெக்சும் முனைவர் அறிவொளி அவர்களது பரம ரசிகர். அறிவொளியவர்கள் பேச்சில் மயங்காதவர் யார் இருக்க முடியும்? மேடையில் அவர் வீற்றிருக்க, பார்வையாளர் வரிசையிலிருந்து நண்பர் அலெக்ஸ் அவர்கள் ஒரு சில நிமிடங்களில் மேலே உள்ள அறிவொளி அவர்களின் படத்தை வரைந்து, பின்னர் அதை அவரிடம் காட்டி, அவரது வாழ்த்துக்களையும் பெற்றார். "மிக அருளுடை வாழ்க" என்று அறிவொளியவர்கள் படத்திலேயே எழுதிக் கையொப்பமிட்டுள்ளதைக் காணலாம். - சூரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக