இந்த வாழ்க்கை ஒரு பயணம். உடலளவில் பார்த்தால் கூட எவ்வளவு பிரமிப்பான பயணம் இது! ஆனால் உடல் அழிந்ததும் இந்தப் பயணம் முடிவதாக நான் நினைக்கவில்லை. நம் அனைவரினுள்ளும் ஒரு உறுபொருள் இருக்கிறது. அது அழிவற்றது. இது நமது முதல் பிறவியும் அல்ல, கடைசிப் பிறவியும் அல்ல. இன்னும் எத்தனை பிறவிகளோ! அப்படிப் பார்த்தால் இந்தப் பயணம் இன்னும் பிரமிப்பாகிறது.
கீதையில் கண்ணன் கூறியதுபோல், நைந்த, நொந்த, இற்றுப்போன உடையை மாற்றுவதுபோல், ஆன்மா உடலை மாற்றிக் கொள்கிறது. நாம் உடல் என்று நினைப்பதாலேயே எண்ணற்ற துயரங்கள். நாம் உடலல்ல அழிவற்ற ஆன்மா என்பதை உணர ஆரம்பிக்கும்போதே நமது துன்பங்களும், துயரங்களும் மறைய ஆரம்பிக்கின்றன.
இந்த வாழ்க்கை ரசித்து அனுபவிக்கவேண்டிய ஒரு பயணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக