💛 ரமண மகரிஷியிடம் பால் ப்ரிண்டன் ஒரு கேள்வி கேட்டார்
உலகில் நிறைய குருமார்கள் இருகிறார்கள்
இவர்களில் யாரை நான் சிறந்த குருவாக ஏற்பது என்று
அதற்கு ரமணர் கூறிய பதில்.....
"யார் உன்னிடம் இல்லாததை வெளியில் எடுக்கிறாரோ,
இருப்பதை உனக்கு கொடுப்பவரோ அவரே சிறந்த குரு என்று கூறினார்."
இல்லாததை எப்படி எடுப்பது.....???
இருப்பதை எப்படி கொடுப்பது.....???
எது இல்லாதது......???
நான் என்ற உணர்வும்,
எனது உடமைகளும்....
எது இருப்பது.....???
என்னுள் இருக்கும் இறைநிலையை உணர்த்துவது என்பதாகும்
ஆனால்
நாம் அனைவரும்
இந்த உடல் தான் நான் என்றும்,
இறைநிலையை வெளியில் தேடிக்கொண்டும் இருக்கிறோம்
இந்த நிலையை யார் உணர்த்துகிறாரோ
அவரையே நம் குருவாக ஏற்போம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக