29 நவ., 2018

நூல் நயம்-3: ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலிலிருந்து சில முத்துக்கள்

மசானபு ஃபுகோகா எழுதிய "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலிலிருந்து சில பருக்கைகள்:

நான் என் மாணவர்களிடம் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் என்னை அப்படியே பின்பற்றாதீர்கள் என்பதுதான். என்னுடைய இந்த அறிவுரையைப் பின்பற்றாவிட்டால் எனக்கு அடக்கமுடியாத  கோபம் வரும். நான் அவர்களிடம் இயற்கையோடு எளிய வாழ்வு வாழுங்கள்; அதை அன்றாட வாழ்வகல் கடைப்பிடியுங்கள் என்று கூறுகிறேன். என்னிடம் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால் நான் கண்டுகொண்டது மிகவும் முக்கியமானதாகும்.

முழுமையிலிருந்து விலகித் தெரியும் ஒரு பொருள் உண்மையானதல்ல.

பூச்சி இனங்களுக்கு இடையே உள்ள உறவுமுறைகளை அலட்சியம் செய்து உருவாக்கப்படும் பூச்சிதடுப்புமுறைகள் பயனற்றவை.

பூச்சிகளும் தாவரக் குடும்பங்களும் ஒரு நிரந்தரமான உறவைக் கொண்டுள்ளன.

மனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது என்பது ஒரு முரணான நகைச்சுவையாகும்.

அடிப்படை விதி என்னவென்றால் களைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒழிக்கப்படக்கூடாது.

பலவகைக் காய்கறிகளையும், மூலிகைகளையும் கலந்து இயற்கையோடு வளர்க்கும்போது பூச்சி மற்றும் நோய் அபாயம் குறைவாக இருக்கும்.

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

கருத்துகள் இல்லை: