5 ஆக., 2019

காமராஜர் நினைவுகள்-20: காமராஜர் குற்றாலம் குளியல்...



காமராஜர் குற்றாலம் குளியல்...

காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணெய் தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்சென்றாராம்.

அருவியில் யாரும் குளித்துக்கொண்டிருக்கவில்லையாம்.
மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக காவலர்களால்
தடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஏன்யா அருவி காலியா இருக்கு? சுற்றுலாப்
பயணிகள் யாரும் குளிக்கலையா?என்று
கேட்டிருக்கிறார்...

இல்லைங்கய்யா,, முக்கியஸ்தர்கள் வந்தால்,யாரையும் அருவியில் அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வரும்
வழக்கம் என்றனராம் அதிகாரிகள்.

உடனே காமராஜர் கோபம் கொண்டு, அது வெள்ளைக்காரன் ஆட்சி.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா, மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை. உடனே அருவியில் குளிக்க மக்களை அனுமதிங்கய்யா என்று சொல்லிவிட்டு, மக்களோடு மக்களாகக் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
அதனால்தான் அவர் இன்றைக்கும் கர்ம வீரர் காமராஜர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை: