28 பிப்., 2020

ஆன்மீக சிந்தனை

"உயிர் வழிபாடு" 
.

"முன்பு தோன்றிய மகான்கள் மனிதர்களிடையே குழப்பங்கள் என்றுமே வரக்கூடாது  பிணக்குகள் இருக்கக் கூடாது மனிதன் மனிதனை உணர்ந்து கொள்ள வேண்டும், இயற்கைச் சட்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்  என்று

(1) இறைவழிபாடு

(2) அறநெறி
.

என்ற இரண்டு செயல் திட்டங்களை உருவாக்கி மக்களுக்குப் போதித்தார்கள். அறநெறி இறைவழிபாடு இரண்டும் வேண்டும் என்று எந்த நாட்டில் எந்தக் காலத்தில் ஒருவர் போதித்தாரோ, அங்கு அன்று உள்ள மக்கள் அதைப் போற்றி அவரது பெயரிலேயே வாழ்க்கை முறையை வழங்கி வந்தார்கள். அதுதான் மதம் எனப்படுகிறது.

மதத்திற்கு என்று தனியாகப் பெயர் இல்லை. மதச் சட்டத்தை உருவாக்கிய பெரியோர்கள் பெயரால் தான் இந்த உலகத்தில் உள்ள மதங்களெல்லாம் வழங்கப்படுகின்றன.
.

இங்கு முக்கியமான ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும். எத்தனையோ மதங்கள் உலகத்தில் தோன்றியுள்ளன. மேலே விளக்கிய இரண்டு அடிப்படைக் கொள்கைகளைத் தான் எல்லா மதங்களும் போதித்திருக்கின்றன என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
.

இறைநிலை ஒவ்வொரு உயிரிலும் உள்ளும் புறமும் நிறைந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வது "உயிர் வழிபாடு". பிறருக்குத் துன்பம் செய்யாது வாழ வேண்டும் ஏற்கனவே துன்பப்படுபவர்களுக்கு இயன்ற வரையில் உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் தான் உலகுக்குத் தேவை.
.

(1) துன்பம் தரும் செயல்களைச் செய்யாது நான் வாழ வேண்டும்,

(2) துன்பப்படும் உயிர்களுக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.
.

இவ்விரண்டு கருத்துக்களை உலக மக்களனைவரும் எடுத்துக் கொண்டார்கள் என்று கற்பனையாக வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் துன்பமில்லாது தானும் சிறப்பாக வாழ்ந்து, முடிந்த வரையில் பிறருடைய துன்பத்தைப் போக்குவது என்று வந்து விட்டோமேயானால், அது தான் வேதம் புராணம் அரசியல் எல்லாவற்றின் உட்கருத்துமாகும்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

For contacts :

https://vethathiri.edu.in/centers/loc/india/

https://vethathiri.edu.in/centers/

https://vethathiri.edu.in/contact/

கருத்துகள் இல்லை: