31 ஆக., 2020

மக்கள் குரல்

சேர்ந்தும், சோர்ந்தும் 
சார்ந்து தலை சாய்த்தும், 
கலைந்தும், களைத்தும் 
கலந்து இன்பமாய் சென்ற 
இல்லற வாழ்வை 
விஷம் நுரைக்கும் மதுபான 
கோப்பைகள் இல்லாமல் 
செய்த கதையிது.....................

தீர்த்த கரைதனிலே 
சமத்துவம் சாத்தியமாகும் 
ஒரு புனிதபொழுதினிலே 
நண்பர்களுடன் கூடி 
குதூகலமாய் ஆரம்பமான 
குடிப்பழக்கம் மெல்ல மெல்ல 
போர்களமாய் மாறிட................

கோபுரமோ 
குப்பைத்தொட்டியில், 
பூக்கடையோ 
சாக்கடையில் என 
மாதசம்பளம் முழுவதும் 
மதுக்கடைக்கு போயிற்று, 
அவனோ 
போட்டால் ஆடினான், 
போட்டுவிட்டு பாடினான்...........

பெருகிப்போன குடியால் 
கருகிப்போன கனவுகளோடு 
நீர் வறண்ட கோடையில், 
நிழலற்ற பாதையில்...............

ஒரு நாள் நா வறண்டு, 
நம்பி வந்த மனைவி, 
குழந்தைகளை விட்டு, 
ஊரும், உறவும் அற்றுப்போய், 
குடும்பபெயரும் கெட்டு.............

அவன் என்பவன் 
மதுவெனும் அரக்கனால் 
"அதுவாகி "
வீழ்ந்தே கிடந்தான் 
வீதி ஓரத்திலே..............

மாண்டு போனது 
அவன் மட்டுந்தானா???
வெகுண்டு எழுந்தவரெல்லாம் 
துவண்டே போயினர் 
வீட்டுக்கு வீடு வாசற்படி 
என்ற கதையினாலே.

       # கார்த்திகேயன்.

நன்றி :

கருத்துகள் இல்லை: