மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் .,
தன்னுடைய மகளின் திருமண
பரிசாக வீடற்ற 90 பேருக்கு வீடுகள்
அமைத்துக் கொடுத்துள்ளார்.
2 ஏக்கர் பரப்பளவில் நகரம் ஒன்றை
உருவாக்கி அதில் வீடுகளை அமைத்து
கொடுத்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை நடத்தி
வரும் தொழிலதிபரான, அஜய் முனாத்
என்பவர் தனது .,
மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை
வித்தியாசமான முறையில் நடத்த
திட்டமிட்டார்.
அதன்படி சுமார் 2 ஏக்கர்
பரப்பளவில் 1.5 கோடி ரூபா செலவில்
90 வீடுகளை கட்டி வீடில்லாதவர்களுக்கு
பரிசாக வழங்கி உள்ளார்.
வீடுகளை யாருக்கு வழங்குவது
என்பது தொடர்பில் தனிநபர் ஏழையாக
இருக்கவேண்டும், குடிசையில்
வசிப்பவராக இருக்கவேண்டும்,
போதைக்கு அடிமையாகாதவராக
இருக்க வேண்டும் போன்ற நிபந்தனை
கொண்டு பயனாளர்களை தேர்வு
செய்துள்ளார்.
அவர் அமைத்து வழங்கியுள்ள
வீடுகளில் இதுவர 40 குடும்பங்கள்
குடியேறியுள்ளனர்.
இந்த நடவடிக்கையை தான்
பெரிதும் பாராட்டுவதாக தெரிவித்துள்ள
இதுகுறித்து முனாத் மகள் ஸ்ரேயா.,
இதை தனது திருமண பரிசாக
நினைக்கின்றேன் என மகிழ்வுடன்
தெரிவித்துள்ளார்.
Amudhan mahrshvarma
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக