30 டிச., 2020

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1010: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
அருளறி யாமையும் மன்னு மறிவு
மருளிவை விட்டறி யாமை மயங்கு
மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

விளக்கம்:

ஆகாயத்தில் இருட்டு வெளிச்சம் என்று இரண்டும் இருப்பது போல் மனதிலும் அறிவு அறியாமை என இரண்டு தன்மை உள்ளது. மயக்கத்தைத் தரும் அறியாமையும் தெளிவைத் தரும் அறிவும் ஆகிய இரண்டுமே நிலை பெற்றிருக்கும். பாடல் #1009 இல் உள்ளபடி மானசீக பூஜையின் மூலம் இறையருளைப் பெற்று உள்ளிருக்கும் மாணிக்க ஒளியைக் கண்டவர்கள் தமது அறியாமையை அன்றே அழித்தவர்கள் ஆவார்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: