1 ஜன., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1012: நான்காம் தந்திரம் - 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

விளக்கம்:

அடி வயிற்றுக்குக் கீழே எப்போதும் மூலாதாரத்துடன் ஒளியாக உடனிருக்கும் சக்தியை தினந்தோறும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்து வந்தால் அந்த ஒளியான சக்தி கீழிருந்து எழுந்து வந்து கழுத்தில் நிற்கும். இந்தப் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வந்தால் நெற்றியின் நடுவில் ஒலியாக இருக்கும் இறைவன் வெளிப்படுவான். அதனைத் தொடர்ந்து நெற்றிக்கு நடுவில் இருக்கும் ஒலியையும் கீழிருந்து மேலே வந்த ஒளியையும் ஒன்றாகச் சேர்த்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்தால் அந்த ஒளியும் ஒலியும் உடல் முழுவதும் பரவி உடலுக்கு மேலே செல்லும்.

குறிப்பு: இப்பாடலில் மானசீக பூஜையின் மூலம் இறைவனை உணரலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: