4 ஜன., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1015: நான்காம் தந்திரம் - 4 நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

விளக்கம்:

நவகுண்டங்களைப் பற்றி யாம் கூறுவது என்னவென்றால் மந்திர சித்தி பெற்றவர்கள் தங்களின் எண்ணம் நிறைவேற குண்டங்கள் (ஹோமக் குழிகள்) அமைத்து அதில் ஹோமம் வளர்க்கும்போது அதனுள்ளிருந்து இறைவனுடைய ஒளி உருவமாகிய அக்கினிப் பிழம்பு மேலெழும்பும். இந்த ஹோமக் குண்டங்களின் மூலம் இறைவனை வழிபடும் வழிபாட்டினால் எல்லா நன்மைகளையும் அடையலாம். ஒன்பது குண்டங்களின் வகைகளையும் அவற்றின் முறைகளையும் யாம் இங்கு கூறுகின்றோம்.

நவகுண்டங்களின் வகைகள்:

1. முக்கோணம் (மூன்று கோணங்கள்)
2. சதுரம் (நான்கு கோணங்கள்)
3. பஞ்சகோணம் (ஐந்து கோணங்கள்)
4. அறுகோணம் (ஆறு கோணங்கள்)
5. அட்டகோணம் (எட்டு கோணங்கள்)
6. பிறை (அரை நிலா)
7. பதுமம் (தாமரை வடிவு)
8. இலை வடிவு
9. வட்டம்

நன்றி :

கருத்துகள் இல்லை: