*படித்ததில் சிரித்தது*
ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் யோவ் கண்டக்டர் இங்க வாய்யா இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ என்றாள். கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் யோவ் கண்டக்டர் இங்க வாய்யா வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா என்றாள். கண்டக்டர் வந்து என்னம்மா அந்தம்மா ஜன்னல திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னல சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா என்று கேட்டார்.
அதற்கு முதல் பெண் சொன்னாள் இங்க பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன் என்றாள். இரண்டாவது பெண் இங்க பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்னாள். கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் சட்டை போடாமல் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டர கூப்பிட்டு அங்க என்ன பிரச்னை என்று கேட்டான்.
கண்டக்டர் சொன்னார் அத ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது.
அந்த மனுசன் நான் ஒரு யோசனை சொல்லவா என்று கேட்டான். கண்டக்டர் சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப்போறேன்னு பார்ப்போம் என்றார்.
அவன் சொன்னான் கொஞ்ச நேரம் ஜன்னல அடைச்சி வை அந்த அம்மா செத்துப் போகும் அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம் என்றான்.
கண்டக்டர் சொன்னார் நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றதுன்னு கேட்டார்.
அதற்கு அவன் சொன்னான் அதப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான் என்றான் அதனால தான் அந்த யோசனையை சொன்னேன் என்றான்.
கண்டக்டர்: ? ? ? ? ? ? ? ? ? ?
*அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் பேச்சிலிருந்து.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக