31 அக்., 2022

இன்றைய குறள்

கவிதை நேரம்


நன்றி :
முனைவர்                       
அ சு இளங்கோவன்

ஆன்மீக சிந்தனை

சிரிப்புத்தான் வருகுதையா!

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

18 அக்., 2022

நூல்மயம்

சுற்றுச்சூழல்

விவசாயி
உடன் ஒரு நாள்🌾🌾

பைநிறம் துளிர்த்த நாற்று.
பக்குவமா பிரித்தெடுத்து
செங்கதிரோன் கைகோர்த்து.
நண்பர்கள் நடவினாள்.
தலையசைத்திடுமே நாளின் நெல்மணிகள்...🌾🌾
இன்றைய களப்பணி 🌳

இடம். #ஈரோடு_வெள்ளோடு👍

#மாண்புமிகு_மரங்கள் #குழு_ஈரோடு🌳

15 அக்., 2022

இன்று சில தகவல்கள்

கலாம் அவர்கள் பிறந்த தினம்

குட்டிக்கதை

தேவை ஓடிபி....
-சிறுகதை 
                      ——

சிவராமன் அரசு அதிகாரியாக ஓய்வு பெற்றார். அவருக்கு சேர வேண்டிய  பி. ஃஎப், கிராச்சுவிடி, கம்முடேஷன், லீவ் என்காஷ்மென்ட், இத்யாதி நாளாவட்டத்தில்  வங்கி அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்தது. அரை கோடிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். வானில் பறப்பது போல உணர்ந்தார்.

வசிப்பது 700 சதுர அடி ஃபிளாட்டில்தான் ஆனாலும் 
சொந்த வீடு எனபதால் வாடகை மிச்சம்..மாசா மாசம் பென்ஷன் 
60 ஆயிரம் வரும் எனபதால் நோ டென்ஷன். மாதாந்திர செலவுக்கு ( காரை மெயின்டெயின் செய்யும் செலவையும் சேர்த்து ) 
தாராளமாக போதும். 

இந்த பணத்தை ரிஸ்க் இல்லாத வண்ணம் மியுசுவல் பண்டிலும் 
வங்கி டெபாசிட்டிலும் பிரித்து போடவேண்டும். கொஞ்ச நாளாகட்டும்...அதுவரை சேமிப்புக்கணக்கிலேயெ இருக்கட்டும்

இவர் ஓய்வு பெறுவதை மோப்பம் பிடித்த இஷ்ட மித்திர பந்துக்கள் உடனே  நிதி வேண்டி கருணை மனுக்களை ஈமெயில் வாட்ஸப், 
எஸ் எம் எஸ், நுணுக்கி எழுதிய போஸ்ட் கார்ட் , இனலன்ட் லெட்டர், ஏ4 சைஸ் மனு  இவற்றின் மூலம் அனுப்பலானார்கள். 
மகளின் திருமணம், மகனின் கல்வி,  எண்சாண் உடம்பில் இருக்கும் ஏராளமான  நோய்களுக்கான சிகிச்சை, இப்படி காரணங்களை சொல்லி..

 சிவராமனா கொக்கா?

இந்த பங்காளிகளூக்கு 
இப்படி பதில் அனுப்பினார்:
'' அன்புடையீர், 
 ஒய்வு பெற்றதால்   எனக்குக்  கணிசமான தொகை கிடைக்கும் என்பது  என்னமோ  உண்மைதான், ஆனால் நான் ஏற்கெனவே ஆபீசில் வாங்கியிருந்த கார் லோன் ஹவுசிங்க் லோன்,பி  எஃப் லோன் இதெல்லாம் போக அற்ப சொற்ப தொகைதான் கையில் கிடைத்தது. அது எனக்கே போதுமா என்று தெரியவில்லை. இதனால் உதவ மனமிருந்தும் கைவசம் காசு இல்லை.  என்னை மன்னிக்கவும்''

 மேற்படி நபர்களை கையோடு  போனில் பிளாக் செய்தார். 

அடுத்து தன்  வங்கி அக்கவுண்டை மனைவியின் பெயரை சேர்த்து ஜாயின்ட் அக்கவுண்டாக மாற்றினார்.
தனக்கு ஏதாவது ஆனாலும் ஃ பாமிலி பென்ஷன் அக்கவுண்டில் வந்துவிடும். 

அவளிடம் தமாஷாக சொன்னார் : இந்த ஜாயின்ட் அக்கவுண்டில் இருக்கும் பாதி பணம் என்னுது..
பாதி உன்னுது. புரியுதா?''
புரிந்தாற்போல அலமேலு 
தலையை ஆட்டினாள்.

அடுத்து மனைவிக்கு 
நெட் பாங்கிங்க் செய்வது 
குறித்து சொல்லிக் கொடுத்தார்.
அக்கவுண்டில் லாக் இன் செய்து  நுழைந்து  பண பரிமாற்றத்துக்கான பின் நம்பரையும் அடுத்து  மொபைலில் வரும் ஓடிபியையும் போடுவது எப்படி என்றெல்லாம் சொல்லித் தந்தார்,  ஒரு அவசரத்துக்காக அவள் தெரிந்துகொள்வது நல்லதுதானே என்று நினைத்ததால்...!

''அலமேலு..ஒண்ணு மட்டும் 
ஞாபகம் வச்சிக்க. பாஸ்வர்டும்  
ஓடிபி என்பதும்  ரொம்ப முக்கியம். ரகசியம்.....யாருக்கும் சொல்லவே கூடாது. புரியுதா ...மறந்துடாதே. போன்ல யாராவது கேட்டா 
போனை கட் பண்ணிடு'' என்றார். 

ஒரு நாள் கோவிலுக்கு 
போய் விட்டு வந்தார். 

வந்ததும் அலமு சொன்னாள்
 "ஏங்க, பேங்குலேருந்துபோன் வந்தது   'உங்க அக்கவுண்டில்  
புது சாஃப்ட்வேர் போட்டிருக்கோம். அதுக்கான ஒரு ஓடிபி மொபைலில் வந்திருக்கும் ..அதை  ஷேர் பண்ணுங்க' ன்னு கேட்டாங்க.''

சிவராமன் வயிற்றில் அரை கிலோ  தும்கூர் புளி கரையலாயிற்று.
'பேங்குலேருந்துதான் போன் வந்ததுன்னு எப்படி தெரியும்?'' என்றார் கலவரத்துடன்

“அவங்களே சொன்னாங்களே?''

'' உனக்கு அறிவு இருக்கா... யாராவது சொன்னா நம்பிடுவியா?  ''

ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கேட்டார்

''ஓடிபியை சொல்லிட்டியா?''

''ஆமாங்க...வெறும் சாஃப்ட்வேர் அப்டேஷந்தானே, மணி  டிரான்ஸ்பர் இல்லையே   அதனால ஓடிபியை ஷேர் பண்ணிட்டேன்.''

நெஞ்சைப் பிடித்தபடி 
சோபாவில் சாய்ந்தார்.

' அம்பது லட்சம்டி .....
மினிமம்  பாலன்ஸ்  கூட வைக்காமல் வழித்து எடுத்திருப்பாங்களே'' 
என்று முணுமுணுத்தபடி.

அலமேலுவின் எட்டு பவுன் பிஸ்மார்க் தாலி செம ஸ்டிராங்க்  என்பதாலும்,  சிவராமன் பரம்பரையில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் ஹிஸ்டரி இல்லாததாலும் இந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வந்திருக்கூடிய  இன்ஸ்டன்ட்  
ஹார்ட் அட்டாக், ஸ்டிரோக் இவற்றிலிருந்து தப்பினார். 

அவருடைய ஈஸிஜியை மட்டும்  
அந்த க்ஷணத்தில் எடுத்திருந்தால் அது உக்ரைன் யுத்தத்துக்கு பிந்தைய ஷேர் மார்க்கெட் கிராப் போல இருந்திருக்கும் என்பது மட்டும்  திண்ணம்.

ஒரு காபியை சூடாக பருகி ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு டெஸிபல்  சற்றே குறைந்த ஹார்ட் பீட்டுடன் மொபைலில் லாக் இன் செய்துகணக்கைப்   பார்த்தார்.

என்ன ஆச்சரியம்....
50 லட்சம் ரூபாய் அக்கவுன்டில் சமர்த்தாக அமர்ந்திருந்தது....
அவரைப் பார்த்து ஹாய் சொன்னது. அப்பாடா... பெருமூச்சை வெளியேற்றினார். ஆபத்து  நீங்கிவிட்டது.  ஓடிபி வந்து நெடுனேரம் ஆனதால் இனிமேல் 
அது காலாவதியாகியிருக்கும். 
அதை யாரும் உபயோகிக்க முடியாது என்பதால் நிம்மதி அடைந்தார்.

மொபைலில் ஓடிபியைப் பார்த்தார்

'அலமேலு ... 2422 அப்படின்னு 
ஓடிபி வந்திருக்கு...அதை கரெக்டா ஷேர் பண்ணீயா? இல்லை ஏதாவது தப்பான பிகர் சொன்னியா?''

''நம்ம அக்கவுண்ட் ஜாயின்ட் அக்கவுன்ட் இல்லையா. பாதி பாதின்னு சொன்னீங்களே...
அதனால்  போன்ல  வந்த ஓடிபி நம்பரை ரெண்டால வகுத்து  
என் ஷேரான 1211 மட்டும் சொன்னேங்க.. அவங்ககூட  
தப்பா இருக்கேன்னு  திருப்பி திருப்பி கேட்டாங்க. நான் அந்த நம்பரைதான் மறுபடி சொன்னேன். போனை வச்சுட்டாங்க... 
நான் செஞ்சது தப்பாங்க ?''

''லைஃபுல  முதல் தடவையா 
ஒரு தப்பை  கரெக்டா பண்ணியிருக்கே ...அதனாலே  
நம்ம பணம் தப்பிச்சது........
சரி கிளம்பு...''

''எங்கே..?''

''உனக்கு தனியா ஒரு புது மொபைலும் சிம் கார்டும் வாங்கித் தரேன்.. இன்னொரு தடவை இந்த ஓடிபி ரிஸ்க் எடுக்க முடியாதும்மா....'' என்றார் புன்முறுவலுடன்...
                        
                       🙏🙏🙏

13 அக்., 2022

குட்டிக்கதை

✍️ கதை ......

செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். 

கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். 

பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.. 

செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். 

மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான். 

பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். 

அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.

ஒரு நாள் செங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். 

நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள். 

செங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான். 

"என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான். 

அவன் குதிரையில் பயணித்தபோது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.

பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் செங்கிஸ்கான், தன் அடையாளத்துக்காக...!

அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லாது.

அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான்
பருந்தும் பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.

அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. 

செங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான். 

பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது. 

செங்கிஸ்கானும் நண்பர்களும் களைத்து போகும்வரை வேட்டையாடினார்கள். 

விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கான், தன் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான். 

மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. செங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது. 

நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. 

பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான். 

அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது. 

தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது. 

தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். 

குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது. 

இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம்..

"இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன். 
இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை''

என்று கடிந்தபடி ,செங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்து கையில் பிடித்துக் கொண்டான். ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். 

"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான். 

இம்முறை வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஏனெனில் ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது. 

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். அது மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன். 

பருந்து வெட்டுண்டது, என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.

பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது. 

இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான். 

பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி
இருந்தது. 

அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். 

தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.

அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும். 

மன்னன் அந்த நீரை அருந்தியிருந்தால், சந்தேகமில்லாமல் உடனே செத்திருப்பான். 

அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான செங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான். 

நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்திலான பருந்தின் சிலை செய்து வைத்தான். 

அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.

*கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன*

மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது..

*உன்னுடைய உண்மையான நண்பன்.* *உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான் செய்கிறான் என்பதை நினைவில் கொள்.."*  நன்றி 🙏🙏💐💐🍫🍫

12 அக்., 2022

இன்று ஒரு தகவல்

சுஜாதா நினைவுகள்

Forwarded  news: 

*உடல் நலம் குன்றி அவதிப்பட்டதை இத்தனை* *நகைச்சுவையாக எழுத அவரால் மட்டுமே முடியும்.* 

*An inspiration to young writers.*

 எனக்கு எத்தனை நண்பர்கள் !! - 
சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். 'யவனிகா' 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது. 'அன்ஜைனா' வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு 'பைபாஸ்' ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி ஆர்ட்டரிகளில் (Coronary Artery) நேரும் அடைப்பை, உடலின் மற்ற பாகங்களிலிருந்து குழாய் எடுத்து மாற்றுப் பாதை அமைத்து தைப்பது). டாக்டர் விஜயஷங்கருக்கு போன் செய்தபோது 'வாங்களேன், ஒரு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்துவிடலாம்' என்றார்.

எட்டு வருஷமாகியும் தோற்றம் மாறாமல் இருந்தார் விஜயஷங்கர் (தினம் ஒரு பைபாஸ் செய்கிறார்). டாக்டர் ராபர்ட் மோ என்கிற கார்டியாலஜிஸ்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் மணிப்பூர் மாநிலத்தவர். சீனர். ஆன்ஜியோ சமாச்சாரங்களில் திறமை மிக்கவர்.  அவர் எனக்கு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்து,  இந்த நற்செய்தியை சொன்னார். “ உங்கள் இதயத்தில்  முன்பு சரி செய்த நான்கு க்ராஃப்டுகளில்   மூன்று அடைத்துக் கொண்டு இருக்கின்றன.  ஒரே ஒரு க்ராஃப்டில்தான்  ஓடிக்கொண்டிருக்கிறது.  கூடிய விரைவில் ஆன்ஜியோபிளாஸ்ட்டி செய்வது நல்லது”   என்றார்.  

டாக்டர் மோ   ஒரு மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா போய் வந்த கையோடு எனக்கு அந்த சிகிச்சை செய்தார்.  உடன் டாக்டர் நஜீபும் இருந்தார்.  ஆப்பரேஷன் நல்ல வெற்றி என்று எனக்கு சிடி போட்டு காண்பித்தார்.

 எல்லாம் நலம் வீட்டுக்குப் போகலாம் என்று படுக்கையடிப்  புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று என் சிறுநீரகம் (acute renal failure) பழுதடைந்து நின்று போய் விட்டது.  விளைவு ராத்திரி ஒரே மூச்சுத் திணறல்.  மேல் மூச்சு வாங்கும் போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னர கிம்புருடர்கள்    “திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்“  என்று பாடும் ஆழ்வார்கள் சகிதம் தெரிந்தார்கள். 

இதில் இரண்டு வகை உண்டாம் - அக்யூட், க்ரானிக் என்று.  எனக்கு கிடைத்தது அக்யூட். டயாலிசிஸ்   செய்தால் சரியாகிவிடும். க்ரானிக் என்றால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் பண்ணிக்கொண்டே இருக்க  வேண்டுமாம். ( நல்ல வேளை,  எனக்கு இதில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்).  சூழ்ந்திருந்த டாக்டர்கள் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன.  அடிக்கடி மானிட்டரையும்  கை  கடிகாரத்தையும் பார்த்தனர்.

நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர் கே சி பிரகாஷ் அழைக்கப்பட்டார்.  அவர் உடனே எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார்.  அப்போலோ காரர்கள் என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ராத்திரியே அதற்கு ஏற்பாடு செய்தார்கள். (டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தை வெளியே கொண்டு வந்தது  கழுவி பிறகு மறுபடி  சிறுநீரகத்திற்கு அனுப்புவது).

 இதற்காக, என் கழுத்தருகில் வெட்டு  போட்ட டெக்னீஷியன் என் அருகே வந்து ” உங்க ஸ்டோரிஸ்  எல்லாமே படிப்பேங்க.  உங்ககிட்ட ஒரு சந்தேகம்  கேட்கணும்...”

"காலையில் பார்த்துக்கலாமே..." 

 "காலைல எனக்கு டூட்டி முடிஞ்சு போயிருவேனே" 

 "டயாலிஸிஸ் ஓடிட்டு இருக்கு இல்லையா....இப்பவேவா?"

 "இது என்னங்க ஜுஜுபி.  பத்து நாளைக்கு ஒரு முறை ட்ரெயின் பிடித்து வந்து   பண்ணிக்கிறவங்க இருக்காங்க.  அங்க பாருங்க.."

 ஹால் முழுவதும் டயாலிசிஸ் மெஷின்கள் அமைத்து பலர் மாத நாவல் படித்துக்கொண்டு டயாலிசிஸ் பண்ணி கொண்டு இருந்தார்கள்.  அப்படி ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது தெரிந்தது. 

 மறுதினம் சந்தேகத்துக்கு இன்னொரு முறை டயாலிஸிஸ் பண்ணிக்கொண்டதும்  சிறுநீரகம் பழைய நிலைக்கு திரும்பி  பொன் வண்ணத்தில் சிறுநீர் கழிக்கத் துவங்கினேன். எனக்கு ஆன்ஜியோவுக்காக கொடுக்கப்பட்ட கறுப்பு திரவத்தினாலோ அல்லது கொலஸ்ட்ரால் எம்பாலிசத்தாலோ வந்திருக்கலாம் என்று என் சங்கடத்துக்குக் காரணம் சொன்னார்கள்.

ஒரு வாரம் ஐசியு-வில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.அதன்பின் வீட்டுக்கு வந்ததும் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதை விவரித்து அதை ஏற்படுத்தியவர் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள் இவை - முடிந்தால் அட்மிட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். என் கேஸில் போல தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்துவிடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லோரும் நல்லவர்கள், திறமைசாலிகள். சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட் கிட்னியையே கவனிப்பார், ஹார்ட், ஹார்ட்டையே...சுவாச நிபுணர் சுவாசத்தையே. யாரவது ஒருவர் பொதுவாகப் பொறுப்பேற்றுச் செய்யாவிடில் அகப்படுவீர்கள். ஒவ்வொரு டாக்டரும் சிற்றசர்கள்போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கையருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் என்றால் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.இல்லையேல், தலைமாட்டு சார்ட்தான். "ஹவ் ஆர் யு ரங்கராஜன்?" என்று மார்பில் தட்டுவார் சீனியர். குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்."ஸ்டாப் லாசிக்ஸ் ...இன்க்ரீஸ் ட்ரெண்டால்..." என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.  அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோ முறையோ - "யார் லாசிக்ஸை நிறுத்தியது?" இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்டு சிஸ்டர் என்னும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் - ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு விளைவும், பக்க விளைவும் உண்டு. ஒரு மாத்திரை கல்குடலாக்கி பாத்ரூம் எங்கிருக்கிறது என்பதே மறந்து போகும். மற்றொரு மாத்திரை இளக்கி குழாய் போலத் திறந்துவிடும். ஒரு மாத்திரை தூக்கத்தைக் கொடுக்கும். ஒன்று கெடுக்கும். ஒன்று, ஈறுகளை, பல்லை மறைக்க வைக்கும் அளவுக்குக் கொழுக்க வைக்கும், ஒன்று பல்லை உதிர்க்கும்.

ஒரு காலத்தில் ஒரு வேளைக்குப் பதினான்கு மாத்திரைகள் சாப்பிட்ட எனக்கு என்ன ஆகியிருக்கும்? ரகளை !

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது  நாம் மட்டும் கண்காட்சிப் பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில், கண்டவர் வந்து கண்டஇடத்தில் குத்தி ரத்தம் எடுத்து க்ளூகோஸ் கொடுத்து, பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து, ஆஸ்பத்திரியில் நிகழ்வது போல மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது. 

அப்பல்லோ போன்ற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான அத்தனை கருவிகளும் உள்ளன. எனக்கே எடுத்த டெஸ்டுகள் ஆன்ஜியோகிராம், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட்,ஒருநாள் விட்டு ஒரு நாள் எக்ஸ்ரே, ரீனல் ப்ரொஃபைல் டெஸ்ட், 1 அண்ட் 2 பிளட் டெஸ்ட், எட்டு மணி நேரம் மெல்லக் கொடுக்கப்படும் ஏதோ இன்ஜெக்ஷன், கால் வலிக்கு டாப்ளர் ஸ்கேன் ...ஒவ்வொன்றுக்கும் மிகுந்த பொருள் செலவாகும். ஏழைகள் அணுக முடியாது. நானே உள்ளாடை வரை உருவப்பட்டு பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

டிஸ்சார்ஜ் ஆகும்போது டாக்டர் கே சி பிரகாஷ் ஒரு சிற்றிடி கொடுத்தார். "எல்லாம் சரியாயிடுச்சு. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு கிராம்தான் உப்பு, ஐந்நூறு மில்லிதான் தண்ணி."

உப்பில்லாமல், தண்ணீரில்லாமல் உயிர்வாழ்வதற்கு இன்னொரு பெயர் உண்டு...நரகம்....

தாகம் என்றால் இப்படி, அப்படித் தாகம் இல்லை....டாண்டலஸ்ஸின் (Tantalaus) தாகம். (புரியாதவர்கள் ஹாய் மதனைக் கேட்கவும்)

(என் குறிப்பு: - சுஜாதா நம்மை விட்டுச் சென்றுவிட்டார். மதன் எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே இந்த டாண்டலஸ் பற்றி நான் படித்ததை (அதில் நினைவிருப்பதை) உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

*********************************************

டாண்டலஸ் ஒரு கிரேக்க இதிகாச ஹீரோ. அவன் ஓர் சமயம் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும்  கடவுள்களுக்கு அவனுடைய மகனைச் சமைத்து பரிமாற விழையும்போது, உண்மை தெரிய வர, கோபத்தில் டாண்டலஸை சபிக்கின்றனர். அந்த சாபத்தின் விளைவாக டாண்டலஸ்  முழங்காலளவு தண்ணீரில் எப்போதும் நிற்பான். அவன் தலைக்கு மேல் உள்ள மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கிளையில் பழங்கள் இருக்கும். அவனால் அதைப் பறித்து சாப்பிட முடியாது. சாப்பிட நினைக்கும்போது பழங்கள் உயரே போய்விடும். சரி தண்ணீராவது குடிக்கலாம் என்று குனிந்தால், காலுக்குக் கீழே இருக்கும் தண்ணீர் வற்றிவிடும். இதனால், டாண்டலஸ் எப்போது கடுமையான தாகத்துடனும், நிரந்தர பசியுடனும் இருப்பான். இவன் பெயரிலிருந்தே ஆங்கில வார்த்தையான tantalize / tantalise  வந்தது. டிக்ஷனரியில் பொருள் பாருங்கள், விளங்கும்.)    

******************************

மறுபடியும் சுஜாதா......

ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் வெளிவந்தபோது நான் இழந்தது பன்னிரண்டு கேஜி. பெற்றது, "எனக்கு இத்தனை நண்பர்களா? இத்தனை நலம் விரும்பிகளா?" என்ற பிரமிப்பு. என் மனைவியும், மகன்களும், என் மச்சினரும் மாற்றி, மாற்றி ட்யூட்டி பார்க்க, சினிமா நண்பர்கள் அனைவரும் வந்து ஆறுதலும், பொருளுதவியும் தந்தார்கள். பக்கத்துக்கு வார்டுகளில் படித்திருந்தவர்கள் தங்கள் வியாதிகளை மறந்து என்னை விசாரிக்க வந்தார்கள். டாக்டர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், லாப் டெக்னீஷியன்கள், பெரும்பாலும் செல்வி என்ற பெயர் கொண்ட அரிதான தமிழ் நர்ஸுகள், அஃறிணையில், இனிமையாக பேசும் மலையாள நர்ஸுகள்,...எத்தனைப் பேர் !!

'நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்' (திருவாய்மொழி) ஆன நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். இவர்களுக்காக இந்தண்டை ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டதில்லை. ஒரு ஸ்டூலைக் கூட நகர்த்தியதில்லை. ஏதோ தமிழில் கிறுக்கினத்துக்கு இத்தனை மதிப்பா? இத்தனை சக்தியா? 

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;
உற்றார்கள் எனக்கிங்கெல்லாரும் என்னும்

என்ற திருவாய்மொழி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

4 அக்., 2022

இன்றைய குறள்

அருள்வாக்கு

சிரித்து வாழவேண்டும்!

ஆன்மீக சிந்தனை

விஜயதசமி வாழ்த்துக்கள்

2 அக்., 2022

குட்டிக்கதை

ஒரு ராஜா கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். 

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். 

இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, 

வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். 

சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். 

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? 

எவ்வளவு போராட்டம்?  

எவ்வளவு இழிசொல்? 

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? 

என்று தன் விதியை நொந்துகொண்டான். 

மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல

 'அப்பனே ஆண்டவா...

என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, 

கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். 

குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். 

"என்னப்பா...சாப்பிட்டாயா?" 

என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். 

கேட்பது ராஜா என்று தெரியாமல் 

"ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, 

முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. 

என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 

'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...

மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். 

இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 

'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 

'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். 

சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார். 

'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 

'ஏனப்பா அழுகிறாய்?' 

என்று ராஜா கேட்க.

 "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...

இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். 

ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க 

"வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...

கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...

கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். 

நல்லதே நடக்கும் சும்மாவா 
சொன்னார்கள்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று.
======

ஆன்மீக சிந்தனை

லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்! 🙏🙏🙏

               ஜய் ஜவான்! 
               ஜய் கிஸான்! 
           என்று முழங்கிய
      லால் பகதூர் சாஸ்திரி
                பிறந்தநாள்! 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
        

ஜனநாயகம், மத நல்லிணக்கம் காக்க சபதம் ஏற்போம் 🙏🙏🙏🙏🙏

அண்ணல் 
மகாத்மா காந்திஜியின் பிறந்தநாள்-
லால் பகதூர் சாஸ்திரிஜி
பிறந்தநாள்-- 
ஏழை பங்காளன் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள். 

வணங்குவோம். வாழ்த்துவோம். 

ஜனநாயகம்- மத நல்லிணக்கம்  காக்க சபதம் ஏற்போம்.

நல்வாழ்த்துக்களும் வணக்கங்களும்

🙏🙏🙏

காந்தி ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!

🙏🙏🙏