18 மார்., 2023

நூல் நயம்

"சைவம் வளர்த்த அருளாளர்கள் ."
நாடகங்கள் .முனைவர் ஜெயந்தி நாகராஜன். ஏ எம் புக் ஹவுஸ் .
முதல் பதிப்பு 2021. விலை ரூபாய் 160 . மொத்த பக்கங்கள் 180.

   இது ஒரு ஆன்மீக புத்தகம் .

      சைவம் வளர்த்த அருளாளர்கள் ஐந்து அருணாளர்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகம் இது.

     மொத்தம் 63 நாயன்மார்கள் .இந்த கால அருள் மிகு கிருபானந்த வாரியார் அவர்களுடன் சேர்த்து 64 நாயன்மார்கள் .அவர்களில் 5 நாயன்மார்களை குறித்து கதையாக சொல்லாமல் நாடகமாக வடிவம் அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

****

நூலாசிரியர் குறிப்பு:

        கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகக்குழந்தை இலக்கியத்துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருகிறார்.

         பாடல்கள், கதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறு என எழுபது நூற்களுக்கும் மேலாக எழுதியுள்ளார்.

        மேனாள் பேராசிரியை (செந்தமிழ்க் கல்லூரி மதுரை) முத்துச்சரம் என்னும் வலையொளி வாயிலாகச் சிறுவர் நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்.

        இணையத்தின் வாயிலாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

         பல்வேறு ஊடகங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

**"
          தமிழகத்தில் தலை சிறந்த பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்நூலாசிரியர். குழந்தை இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு, இலக்கியம், போன்ற பல்வேறு துறைகளிலும் தனக்கே உரிய எளிய நடையில் மிக உயர்ந்த கருத்துக்களை படைத்து வருபவர்.

          சமூக ஊடகம் வானொலி, தொலைக்காட்சி, வார, மாத, தினசரி இதழ்களிலும் தனது பங்களிப்பை செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள முன்னணிப் பதிப்பங்களிலும் தனது படைப்பினை பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

         நாடகம் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல காரணம் கதை மாந்தர்களின் அத்தனைத் தரவுகளையும் மிக நேர்த்தியாக, அனைவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் எழுத்து வடிவில் கொண்டுவருவது கடினம். அதனை நூலாசிரியர் மிகவும் திறம்படக் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

         இந்நூலின் கதை மாந்தர்களை இன்றைய இளைய தலைமுறையினர் அவசிம் தெரிந்து கொள்ள வேண்டும் ..

***

1. சேக்கிழார் பெருமான்

2. நம்பியாண்டார் நம்பி

3. மனுநீதிச் சோழன்

4. திருக்குறிப்புத் தொண்டர்

5. மெய்ப்பொருள் நாயனார்

6. சிறுத்தொண்டர்

        தமிழோடு இசையையும் சேர்த்து வளர்த்த பெருமை சைவத்திற்கும், வைணவத்திற்கும் உண்டு.
         பக்தி இலக்கியங்கள் பெருக அவை துணை நின்றன. சைவ சமயத்தின் மேன்மையை எடுத்துரைக்கும் நூலாகப் பெரிய புராணம் திகழ்கின்றது .

        பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும்.     
           சுந்தரமூர்த்தி நாயன்மாரைக் காப்பியத் தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் தமது நூலில் விவரிக்கிறார். 

        பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்குகின்ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பார்கள்.

         புற இருளை நீக்க, சூரியன் இருக்கிறது. அக இருளை நீக்க அறியாமையை நீக்க இந்தப் பெரிய புராணம் என்ற நூலை எழுதுகிறேன் என்று நூல் காரணம் சொல்கிறார் சேக்கிழார் பெருமான். இந்தத் தமிழ் மண்ணிலே பிறந்து இங்கேயே வாழ்ந்து, பக்தி நெறி தழைக்கச் செய்த அன்பர்களைப் பாடிய பெருங் காப்பியம் பெரிய புராணம் . முக்தியை விடப் பக்தியே பெரிது என வாழ்ந்து காட்டிய அருளாளர்களைப் பற்றியே சைவம் வளர்த்த அருளாளர்கள் என்னும் நூல் பேசுகிறது.

         உலகம் உய்ய இந்தத் திருத் தொண்டர்களின் வரலாற்றைப் பாடுகிறேன் என்றுரைத்த அடியார் சேக்கிழார் பெருமானின் வாழ்க்கை, திருமுறைகளைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பியின் கதை, மனுநீதிச் சோழனின் கதை, திருக்குறிப்புத் தொண்டர், மெய்ப்பொருள் நாயனார், சிறுத் தொண்டர் ஆகியோரின் கதைகளை நாடக வடிவில் தரப்பட்டுள்ளது.

        பள்ளி, கல்லூரி விழாக்களில் தமிழ் நாடகங்களைக் காண்பதே அரிதாகி வருகின்ற சூழலில் இந் நூல் அக் குறையைத் தீர்க்கும் முகத்தான்
 பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் இந்த நூலை பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.

           ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கும் பக்தி பெருகும் முத்தமிழில் ஒன்றான நாடக பயிற்சி கிடைக்கும்.

        தமிழ் கூறும் நல்லுலகம் சைவம் வளர்த்த அருளாளர்கள் என்னும் நாடக நூலை வரவேற்கும் என்றே நம்புகிறேன்.

"சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

மாணிக்கவாசகர்

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 *சிறப்பு - 1* நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14. *சிறப்பு - 3* அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.

15. *சிறப்பு -4* அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*ஓம் நமச்சிவாய..

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்


கருத்துகள் இல்லை: