24 மே, 2023

நூல் நயம்

"கனவுகள் விற்பனைக்கல்ல."
கவிஞர் அமிர்தா . சோலை பதிப்பகம் 
முதல் பதிப்பு -2021 மொத்த பக்கங்கள் 112 விலை ரூபாய் 100.

30 நாள் வாசிப்புப் போட்டியில் முழுகாமல் கலந்து கொண்டதற்கான பரிசு புத்ததகம் ஆக கனவுகள் விற்பனைக்கு அல்ல வந்து சேர்ந்தது.

     முயலாக ஓடி மூன்றாமிடத்தில் ஆமையாக நின்றுவிட்டேன்.

       சபரிமலை யாத்திரைப் பயணமும் எம்ஏ இரண்டாமாண்டு தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

        மூன்று குதிரைகளில் ஓடியதால் மூன்றாமிடம் போலும்,போதும்.

    பிரியா மேடத்திற்கும் கதிரவன் சாருக்கும் புத்தககம் அனுப்பிய சோலைப் பதிப்பகத்திற்கும் கவிஞர் அமிர்தா அவர்களுக்கும்  நன்றி.

#######

வேறெந்த நூற்றாண்டையும்விட இந்த நூற்றாண்டில்தான் தமிழ்க் கவிதை பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும் சந்தித்திருக்கிறது.

       கதை சொல்லுதல், நீதி கூறுதல் போன்ற அதன் கூறுகள் இடம் மாறிவிட்டன. படைப்புத் துறையில் உரைநடையும், திரைப்படமும் பெற்ற எழுச்சி கவிதையைப் பாதித்துள்ளது.

        தமிழ்க் கவிதையின் தொன்மையான கோட்பாடுகள் மறக்கப்பட்டு விதேசிய கோட்பாடுகளே பேசத் தகுந்தவையாகிவிட்டன. இன்றைய தமிழ்க் கவிஞன் தனது மரபை அறியாதவனாக இருந்து கொண்டே புற மரபுகளில் ஈடுபாடுள்ளவனாக இருக்கிறான்.

 அந்த வகையில் கனவுகள் விற்பனைக்கு அல்ல கவிதை அருமையாக அமைந்திருக்கிறது.

#####

#####

என்னுரை என்று கவிஞர் அமிர்தா
முறையை கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்:.
      கவிதையும் நானும் கைகுலுக்கிக் கொண்ட எனது பள்ளிப்பருவத்திலிருந்து நான் கடந்து சென்ற வாழ்வின் சில தருணங்கள் கவிதைகளாய்மாற கடமையும், வறுமையும் என் கவிதைகளை அச்சேற்றவிடாமல் செய்ய, காற்றோடு கலந்துவிட்டன. பல புனைவுகள் கனவாகவே...

         எதையும் எதிர்பார்த்தோ எதிர்ப்பார்க்க வைத்தோ புறப்படாமல் கல்லுக்குள் ஈரமாய் நின்று, மனதில் ஒரு பிரளயத்தை உருவாக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு.

       அத்தகைய கவிதை உலகில் என்னை நான் பிரசவித்த முதல் குழந்தை உங்கள் கைகளில் தவழும் கனவுகள் விற்பனைக்கல்ல.."என்கிறார் கவிஞர் அமிர்தா அவர்கள்.
####

       அணிந்துரை வழங்கிய கவிஞர் மு. மேத்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
       தமிழ் அறிந்தவர்களில் யாரும் தாயுமானவரை
அறியாதிருப்பார்களோ? ஆனால், கவிஞர் அமிர்தா அவர்கள் நமக்குக் காட்டுவது துறவால் தாயுமானவரை அல்ல உறவால் தாயும் ஆனவரை.

வாழ்க்கை அழகுதான்... அதில் உன் நினைவுகளோ
பேரழகு!
என்று அமிர்தாவின் அழகான கவிதையால் அலங்கரிக்கப்படுவோம் என்று தெரிந்தால் இனிமேல் அம்மிகூட அம்மாவாய்ப் பிறப்பதற்கு ஆசைப்படும்.

விநோதமானது...
வாழ்க்கை
நம்மோடு
விளையாடும் விளையாட்டு!

சில சமயங்களில் நினைவாக... சில சமயங்களில் கனவாக...
சில சமயங்களில் உருவமாக... சில சமயங்களில் அருவமாக!

      வார்த்தைகளுக்குள் காட்சியளிக்கும் கவிஞரின் வாழ்க்கையோ புரியாத மொழியில் புதிர் போட்டுவிட்டு, நம்மைப் பார்த்துப் புன்னகை பூக்கிறது. கவிஞரை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று நாம் ஆதங்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவரே வழங்கிய வாக்கு மூலம் இது.

நானே
புரிந்துகொள்ள முடியாத
புதிராய்
நான்.

கவிஞர்கள் காதலைப் பற்றித்தான் காவியம் பாடுவர்! ஆனால், அமிர்தா அவர்களோ 'காதலா? நட்பா?' என்று ஒரு பட்டிமன்றம் நடத்தி - தீர்க்கமாக ஒரு தீர்ப்பும் வழங்குகிறார்.

“காதலை எழுத
வார்த்தைகள் போதும்... நட்பை எழுத
வாழ்க்கை ஒன்று வேண்டும்!”

காரணம்
இதோ கவிஞரின் கவிதையே  வழங்குகிறது தீர்ப்பு.

இதயம் இடம் மாறினால் காதல்
இதயமாகவே மாறினால் நட்பு

        வரலாற்றை உள்ளத்திற்குள் ஓவியமாய் வரைகிறது அமிர்தாவின் தாயுமானவள் என்ற தலைப்பிலேயே வரும் கவிதை.

நட்புப் புன்னகையில்
கைகோர்த்துக் கொண்ட
நாளிலிருந்து
ஒற்றை வார்த்தையில்
தாயாகிப் போனவள் நீ!
புரியவில்லை என்பவர்களுக்குப் பொருளடக்கம் சொல்கிறது
பின் தொடரும் இக்கவிதை :

ஒற்றைப் புன் சிரிப்பில்
என் காயங்களைத் துடைத்தெறிந்தவள் நீ... அனாதை என்ற என் பட்டத்தை உன் அரவணைப்பால் உடைத்தெறிந்தவள் நீ...

இவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் அன்பின் கோட்டோவியம் தீட்டிக் காட்டவேண்டிய அவசியம் இப்போது என்ன நேர்ந்தது?

நாம் இருவரும்
நடந்துசென்ற பாதையில்
இன்று நான் மட்டும்
தனியே -
உன் பாதச் சுவடுகளைத்
தேடியவாறு!

யாரிடமும் சொல்லாத
சோகம் எல்லாம் சேர்த்து வைக்கும்...
என் இதயம்
உன் மடி சாய்ந்திடும்
நாளை எண்ணி!
இதயம் தனக்கான சோகங்களை எதற்காகச் சேர்த்து வைக்கிறது? இன்னொரு இதயத்திடம் அதைப் பகிர்ந்து கொள்வதற்குத் தானே... இதோ - அமிர்தா தன் கவிதையில் வெளிப்படையாய் அதை விவரிக்கிறார்..

துறவுக்குள் மூழ்கிய ஒருவரைத் தாயுமானவர் என்று அழைத்த தமிழ், உறவுக்குள் மூழ்கிய ஓர் அன்பான அம்மையை அமிர்தாவின் வார்த்தையில் தாயுமானவள் என்று அழைத்துத் தான் எழுதும் தமிழைத் தலை நிமிர்கிறது.

       புதுக்கவிதை உலகத்திற்குப் பூமாலை அல்ல - ஒரு பொன் மாலையையே சூட்டியிருக்கும் கவிஞர் அமிர்தாவின் பாமாலையைப் பாராட்டுவோம்.

       புதுக்கவிதை இதோ தன்னைப்
புதுப்பித்துக் கொள்கிறதென்று பூரிப்புக் கொள்வோம்!"என்கிறார் கவிஞர் மு. மேத்தா
#######

       இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்.:

         கனவு காணாத மனிதர் யாருமில்லை. Fantacy .தன் எதிர்காலம் பற்றிய கனவுகள், தன் வாழ்க்கையில் அடையவேண்டிய இலட்சியங்கள் பற்றிய கனவுகள், என பலவிதமான கனவுகளை நாம் ஒவ்வொரு கண்டு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
      அந்த வகையில்  கவிஞர் அமிர்தா அவர்கள் தன்னுடைய கவிதை சார்ந்த கனவுகளுடன் கவிதை வானில் சிறகடித்து பறந்துகொண்டிருக்கிறார். தன் கவிதை வானில் அவர் கண்ட கனவுக் கவிதைகளை இந்த நூலின் மூலம் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். 

'பிரிவு' என்ற கவிதையொன்றில், பிரிவின் வலியை சொல்லும் போது, அந்த வரிகளை படிக்கும்போது, நம் உதடுகளுக்கே வலியெடுக்கிறது.

இதோ ஒரு நடைபிணம் உன் பிரிவில், நான்
என்ற உயிர்ப்பான வரிகள் வலிகளை சுமந்தபடி வார்க்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று,
*உனக்காக காத்திருந்தபோதுதான் உணர்ந்தேன் ஒரு நொடியின் நீளத்தை*
என்ற வரிகளில் .
*உறக்கம் வராத 
இரவுகளின் தனிமையில் கடிகார முள்ளின் ஓசைகள் சொல்லும்,
உந்தன் பெயரை
என்று தனிமையில் கூட நினைவுகளின் பிரிவின் வலியோடு கனவில் நீந்துவதை உணர முடிகிறது.

         அதேபோன்று, சமுதாய நோக்கோடு பிற உயிரினங்களுக்காகவும் வருத்தப்படுவதை நம்மால் உணர முடிகிறது இந்த கவிதையில்.

*புயல் வந்ததும் வீடு பறிபோனது 
எந்த அரசாங்கம் உதவி செய்யும்
பரிதாபமாய் காகம்*
என்ற வரிகளில்  இவரின் இரக்க சிறகுகள். 

       எதிர்கால சந்ததிக்காகவும் கனவு காண்கிறார் .அதை,
*சேர்த்து வைக்கவேண்டிய நீரெல்லாம் உப்போடு உறவாடச் சென்றுவிட,
நம் பேரனுக்கும் பேத்திக்கும்
தண்ணீரை காகிதத்திலா நிரப்பிவைப்போம்!
       என்றதில் தண்ணீர் சேமிப்பு நம் கண்களில் உப்பு சேர்ப்பு கண்ணீரை வரவைக்கிறது.

        மனிதன், பறவை, எதிர்கால சந்ததிகள் என்று பலர்மீது இரக்கமும், அக்கறையும் கொண்ட இக்கவிஞர் மனிதத்தை பற்றி சிலவரிகள்.

மனிதம் வளர்ப்போம்

*அவசர அவசரமாய் ஓடிச்செல்லும் முகங்கள் எல்லாம் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும்.
சாதி வேரில்
சரித்திரம் படைக்கும் காதலெல்லாம்
கருகிப்போகும்
காக்கைகளும் குருவிகளும் தொண்டை வரல கத்தும் ஒரு சொட்டு நீருக்காக.

குப்பைக்கூடையில் மீதமாகும் ஏழையின் பசி போக்கும் வடித்த சோறுகள்.

*இனியேனும் மாற்றுவோம்
வீட்டுக்கொரு
மனிதம் வளர்ப்போம்
என்று மனிதாபிமானத்தை விதைக்கிறார்.

.1)தோழன்

என் தாயைத் தாண்டி முழுதாய்
 என்னை புரிந்து கொண்டவன் நீ!
என்னை உனக்கும்
உன்னை எனக்கும் புரிய வைத்தது காமம் கடந்த நம் நட்பு!
என்னுள் மறைத்து வைத்த காயங்களை உன்னிடம் மொழிபெயர்க்க வேண்டும்.

எப்போதும் என் வாழ்க்கைப் பாதையின் வழித்துணையாய் நீ...நட்புடன்

மரணம் கடந்து நம் சதைகளை உண்டுகளித்த மண்கூட உச்சரிக்கும் நம் நட்பின் புனிதத்தை...

3) கலாப்ரியா ஹைக்கூ கவிதைகளை எழுதுவதற்கு முன்பாக அதை பற்றி புரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நுட்பம் அறிவதற்கும் ஆயிரத்துக்கும் அதிகமான ஹைக்கூ கவிதைகளை பார்த்து பார்த்து படித்து படித்து தன்னை புதுப்பித்துக் கொண்டதாக கூறியிருந்தார்.     நமது கவிஞர் அமிர்தா அவர்கள் எத்தனை ஹைக்கூ கவிதைகளை படித்து தன்னைப் புதிப்பித்துக் இந்த ஹைக்கூ கவிதைகளை எழுதி பதிவு செய்தாரோ.

ஹைக்கூ...

அமைதியான இரவு 
ஆங்காங்கே இரைச்சல் 
சில்வண்டுகள்.

வெட்டுவது பாவம்தான் 
வெட்டினால் தானே உணவு
 விறகுவெட்டி.

விண்ணில் வலை வீசுவதில்லை 
நிலவின் துக்கம் 
மகிழ்ச்சியில் மீன்கள்.

எத்தனை நாள் ஆகிறது
 கொஞ்சம் கவனிக்கக் கூடாதா 
ஏழையிடம் வயிறு.

நிறைந்திருக்கும் உணவு விடுதிகள் அவசர அவசரமாய் அள்ளிப்போடும் இயந்திரங்கள் 
இன்றைய மனிதர்கள்.

பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் புலம்புகிறது 
ஒற்றைப்பனை.

புயலுக்கு பயந்தா வீட்டை சுமந்து செல்கிறாய் ஒ! நத்தையே!

நீண்ட இரவு
நிலவு பேசிக்கொண்டிருக்கிறது காற்றிடம்தான்.

####
4)   தீர்ந்து கொண்டிருக்கிறேன்:

உன்னை எழுத எழுத என் இரவும் இந்த பேனா மையும் உன் நினைவில் நானும் தீர்ந்து கொண்டிருக்கிறோம்.

நிறைய எழுதவேண்டும் உன்னை விடிந்துவிடும் இரவுகள் விட்டுச் செல்லும் மிச்சத்தை

அடுத்த இரவு வருவதற்குள் புதிதாய் துளிர்த்து விடுகின்றன
 புத்தம்புது எண்ணங்கள்.
 எல்லா இரவுகளிலும் நிரம்பி வழிகிறாய் எப்படி எழுத உன்னை?

5)குழந்தைத் தொழிலாளி:
*பக்கத்து வீட்டு பாப்பாவுடனும் 
எதிர்த்த வீட்டு அக்காவுடனும் 
அடுத்த வீட்டு அண்ணனுடனும் புத்தகப்பையும், புதுத்துணியுமா ஆத்தாளுக்கு கையசைச்சு 
புறப்பட்டு பள்ளிக்குப் போக

 காஞ்ச இலைய எடுக்கலையா
எச்சில் டம்ளரை துலக்கலையா 
அங்கென்ன வேடிக்கை 
நங்கூரமாய் முதுகில் இறங்கிய 
ஒற்றை அடியில் 
பள்ளி கனவுகளும் 
வறுமை வயிறும்
 பயந்து போய் ஒட்டிக்கொள்ளும் 
 எச்சில் இலைகளில்.*

6)வியக்கிறேன்

புரையோடிய புண்களை மட்டுமல்ல மனதைக் குடையும் ரணங்களையும் மறக்கச்செய்யும் இந்த காலத்தை 
எண்ணி வியக்கிறேன்...

7)சாராய நாற்றம் சுமந்த நான்கு சக்கர வாகனம் தலைதெறிக்க ஓடி
 நசுக்கி செல்லும் யாரோ தூக்கி போட்ட பொறையை துரத்திச் சென்ற அந்த தெருவோர நாயை.

8))கொஞ்சம் தனிமை வேண்டும்

சாலையோரம் அழுக்காய்
என்னை இம்சித்துக் கொண்டேயிருக்கும் அந்த கூக்குரலின் வலியை எழுத அரை அம்மணமாய் ஒட்டிய வயிறில் உருண்டோடும்

பசியின் கதறலைப் பதிக்க...

என்னை நச்சரித்துக் கொண்டே இருக்கும் அந்த குரலை மறந்துவிடாதே என என் ஒவ்வொரு கவளச் சோற்றிலும் தெரியும் அந்த ஏக்க முகத்தை

கருப்பையை சுரண்டி

தாய்மையைத் தட்டியெழுப்பும் அந்த சிசுவின் அழுகுரலை எழுத்தாய் மாற்ற கொஞ்சம் தனிமை வேண்டும்...*
####

     இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதைகளும் படிப்பவர் நெஞ்சில் உற்சாகத்தை ஊற்றெடுக்கவைக்கும், புது சிந்தனையை தட்டியெழுப்பும் என்பது உறுதி.

."கனவுகள் விற்பனைக்கல்ல."

     இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதைகளும் படிப்பவர் நெஞ்சில் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், புது சிந்தனையை தட்டியெழுப்பும் என்பது உறுதி.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல் 

கருத்துகள் இல்லை: