தலைப்பு - அறியப்படாத தமிழகம்
ஆசிரியர் - தொ. பரமசிவன்
நான் படித்த தொ. பரமசிவனின் முதற்புத்தகம் இது. நம் எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி வேறொரு பரிமாணத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது இப்புத்தகம்.
தமிழர்கள் ஏன் புண்ணியஸ்தலங்களில் தலைமுடியை மழித்துக் கொள்கிறார்கள்?
மதத்தின் பெயரால் மொட்டையடித்துத் கொள்ளும் பழக்கம் பௌத்தத் துறவிகளிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது
கிபி பத்தாம் நூற்றாண்டுக்கு முன்புவரை தாலி கட்டிக்கொள்ளும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லை
இவையெல்லாம் வியப்பாக உள்ளதா!
இதைப்போன்று நாம் அறிந்திராத இன்னும் பல தகவல்கள் இப்புத்தகத்தில் கொட்டிக்கிடக்கிறது.
தமிழர் உணவுப்பழக்கம், நம்பிக்கைகள், கடவுள்கள், வீடு, வாழ்வு, விழாக்கள், மரபுகள் என நம்மை ஒவ்வொரு கட்டுரையிலும் வியப்புக்குள்ளாக்குகிறார் தொ.ப.
கண்டிப்பாக தமிழர்கள் அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் தான் “அறியப்படாத தமிழகம்”
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக