"சாணக்கியரின் ஏழு தலைமை ரகசியங்கள்".
ராதாகிருஷ்ணன் பிள்ளை .ஜெய்கோ பப்ளிகேஷன்ஸ் முதல் பதிப்பு 2015 .
விலை ரூபாய் 300. மொத்த பக்கங்கள் 290.
ஆசிரியர் குறிப்பு:
முனைவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் கார்பொரேட் சாணக்யா'" சாணக்யாஸ் 7 சீக்ரெட்ஸ் ஆஃப லீடர்ஷிப் ரானக்யா இள யு 'கதா ராணாகயாட் தஸ் ஸ்போக் சாணக்யா மற்றும் சாணக்யாந்த போன்ற பல வெற்றிகரமான' புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் சமஸ்க்ருதத்தில் முதுநிலை பட்டமும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். நிர்வாகத்துறையில் பெரிதும் மதிக்கப்படும் ஆலோாகர் மற்றும் பேச்சாளரான அவர் மும்பை பல்கலைக்கழகத்தின் 'சாணக்யா தலைமைத்துறை சர்வநேச ஆராய்ச்சி நிலையம்' (சாணக்யா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் லீடர்ஷிப் ஸ்டடீஸ் (CIILS) இல் உதவி இயக்குனராக பொறுப்பு வகிக்கிறார். @rchanakyapillai என்ற ட்விட்டர் பெயரிலும் பல்வேறு சமூக வவைத்தளங்களிலும் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்கிறார்.
முன்னாள் மும்பை கமிஷனர் ஆஃப் போலீஸ் மற்றும் மஹாராஷ்ட்ராவின் டைரக்டர் ஜெனெரல் ஆஃப் போலீஸ் டி.சிவானந்தன் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் நவம்பர் 2008ல் நடந்த தாக்குதலிற்குப் பிறகு மும்பையின் பாதுகாப்பு அமைப்புகளை திரும்பவும் வலுப்பெறச் செய்ததில் பெரும் பங்கு வகித்தவர் தேசீய பாதுகாப்பு மையத்தின் செயலகத்தில் (நேஷனல் செக்யூரிடி கௌன்ஸில் செக்ரெடேரியட்) விசேஷப் படையின் உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார் தற்பொழுது பல நிறுவனங்களில் இயக்குளரவை உறுப்பினராகவும் செக்யூரஸ் ஃபாஸ்ட் இந்தியா பி.லிட் டின் நிறுவனர்-சேர்மனாகவும் இருக்கிறார்.
######
இனி இந்த புத்தகம் குறித்துப் பார்ப்போம் இந்த புத்தகம் ஏழு தலைப்புகளில் சாணக்கியரின் ஏழு தலைமை பண்புகளில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது..
சாணக்கியர் யார்?
1.சுவாமி
2.அமாத்யா
3.ஜன்பதா
4.துர்க்
5.கோஷா
6.தண்ட்
7.மித்ரா
##
கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சாணக்கியர் ஒரு ஒப்பற்ற தலைமை குரு. அவருடைய பொக்கிஷமாம் பாடங்கள் அவருடைய அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் காணப்படுகிறது. அது சீரிய தலைமைத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு நாட்டை எப்படி சிறப்பாக ஆளுவது என்பதை விளக்குகிறது.
ஒரு தேசத்தின் சீர்மையான வளர்ச்சிக்கு சப்தாங்கம் என்றழைக்கப்படும் கொள்கை அவசியம் என்று அர்த்தசாஸ்திரம் உரைக்கிறது.
அவாமி, அமாத்தியர், ஜன்பதா, துர்க், கோஷா, தண்ட், மித்ரா என்பன் ஒரு நல்லாட்சியின் ஏழு தூண்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் அரசர்கள் இந்தக் கொள்கையை ஒரு வெற்றிகரமான அரசாட்சியின் மாதிரியாகப் போற்றி வந்திருக்கிறார்கள்.
சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் என்ற புதிய வழி காட்டும் இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் ராதாகிருஷ்ணன் பிள்ளை மஹாராஷ்டராவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் டிசிவானந்தனின் நிஜ வாழ்க்கை உதாரணத்தின். மூலமாக சாணக்கியரின் சப்தாங்கத்தை விளக்குகிறார். சிறப்பான நிர்வாகத்தின் மறு உருவமாக விளங்கும் திரு. சிவானந்தன் இயக்கமிகு தலைவரை உருவாக்கும் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டி ஆக்கபூர்வமான மேலாண்மைக்கு வழிகாட்டுதல்களை நல்குகிறார்.
சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் புத்தகத்தில் நடைமுறைகளை தேற்றம் விளக்குகிறது. போலீஸ் மேற்பார்வையின் பரந்த அனுபவத்தை கல்வி ஆராய்ச்சி விளக்குகிறது. தொன்று தொட்டு வழங்கிவரும் சூத்திரங்கள் நவீன கால வெற்றியின் மூலமாக விளக்கப்படுகின்றன. பிள்ளையும் சிவானந்தனும் இணைந்து சாணக்கியரின் மாதிரிக்கு உயிர் கொடுக்கிறார்கள்.
ஒரு அரசாட்சியை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு தலைமையின் ஏழு ரகசியங்களை எவரும் பயன்படுத்தலாம். இவைகளை உங்கள் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். சாணக்கியரின் ஞானமெனும் மந்திரம் உங்களை ஒரு சிறந்த தலைவராக உருவாக்கும்.
இந்தப் புத்தகம் நிர்வாகம் மற்றும் தலைமை பற்றியதாகும். இருப்பினும் நிர்வாகம் மற்றும் தலைமைப் பின்னணி இல்லாத மற்றவர்களும் கற்றுக் கொள்ளும் வகையில் இந்தப் புத்தகத்தை எளிமையான பாணியில் எழுதபோட்டுள்ளது.
. • "கார்ப்பரேட் சாணக்கியா" என்ற இவரின் முதல் புத்தகத்தில்
தரப்பட்ட பாடங்களின் தொடர்ச்சியே இந்தப் புத்தகம். நீங்கள் அந்தப் புத்தகத்தை முதலிலேயே படித்திருந்தால் இந்தப் புத்தகத்திலுள்ள கோட்பாடுகளை இன்னும் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். அப்படியில்லையானால் நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படும் சாணக்கியரின் போதனைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முதல் புத்தகத்தை நீங்கள் படிப்பது நலம்.
இந்தப் புத்தகத்தில் சாணக்கியரின் மூல சூத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மும்பை பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதப் பிரிவின் ஆர்.பி.காங்கலே எழுதி மோதிலால் பன்ஸாரிதாஸால் பிரசுரிக்கப்பட்ட "கௌடில்யாஸ் அர்த்தஸாஸ்த்ராஸ்" (கௌடில்யரின் அர்த்தசாஸ்திரங்கள்) என்ற ஆங்கில புத்தகத்தில் தரப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகள். மூலப் புத்தகமான "அர்த்தசாஸ்திரம்" படிக்க விழைவுள்ளவர்கள் இதைப் படிக்கலாம்.
####
சாணக்கியரின் யுக்தியான தலைமையின் 7 ரகசியங்கள்
தலைமை - அதன் தத்துவம்
அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் தலைவனை விஜிகிஷ அதாவது வெற்றியில் விருப்பமுள்ளவன்; சவால்கள் இருப்பினும் அவற்றை வெற்றி கொள்பவன் - என்றழைக்கிறார்.
இன்றளவிலும் ஒரு தலைவன் சாதனைகள் புரியவேண்டுமானால் சூழ் நிலைகள் எப்படியிருந்தாலும் தன்னை ஒரு வெற்றியாளராக எண்ண வேண்டும்.
தலைமை ஒரு தத்துவமாக பல நூற்றாண்டுகளாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஒரு தேசம் அல்லது நாட்டின் அரசனையே "தலைவன்" எனக் கொண்டனர். இன்று எல்லாத் துறைகளிலும் அரசியல், வாணிபம், விஞ்ஞானம், கல்வி, நிர்வாகம், ராணுவம்,, சமுதாயம், சமூகம், பல தொழிற் சங்கங்கள், விளையாட்டு குழுக்கள், ஏன் ஆன்மீகத்தில் கூட தலைவர்கள் இருக்கிறார்கள். சில தலைவர்களுக்கு ஏராளமான தொண்டர்கள் இருப்பார்கள்; மற்றவர்களுக்கு இல்லாமலிருக்கலாம்.
சில தலைவர்கள் சிறந்த நாவலர்களாகவும் பொது மேடைப் பிரசங்கிகளாகவும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் மேஜையின் முன்போ அல்லது ஆய்வு கூடத்திலோ அமைதியாக வீற்றிருந்து "சிந்தனைச் சிற்பிகளாக" இருக்கிறார்கள். அவர்கள் மக்களின் சிந்தனைக்கு புதிய திசைகளும் பார்வைகளும் நல்குகிறார்கள்.
சில தலைவர்கள் தங்கள் வாழ் நாளில் மிகப் பிரபலமாக இருக்கிறார்கள்; அவர்களுடைய பணி அந்தத் தலைமுறையில்
அங்கீகாரமும் வேகமும் பெறுகிறது. அவர்களுடைய மறைவிற்குப்பின் மற்ற தலைவர்கள் போற்றப்படுகிறார்கள்; காரணம் அவர்களுடைய காலத்தைத் தாண்டி நின்றதால் அந்தத் தலைமுறை அவர்களுடைய சிறப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
லோக்மான்ய திலக். ரபீந்தரனாத் டாகூர் அல்லது திருவள்ளுவர் போன்றவர்கள் அவர்களுடைய குறிப்பிட்ட பிரதேசத்திலோ. கிராமத்திலோ. சமூகத்திலோ மஹாத்மா நெபோலியன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அல்லது ஆப்ரஹாம் அல்லது காந்தி,தேசத்திலோ அறியப்படுகிறார்கள். லின்கன் உலக அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.
இருப்பினும் இந்தத் தலைவர்களுக்கெல்லாம் ஒன்று பொதுவாக இருக்கிறது; சில குணங்கள் அவர்களுக்கு மதிப்பையும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்தன. நாம் அவைகளை தலைமைப் பண்புகள் என்றழைக்கிறோம்.
ஆக, துல்லியமாக, தலைமை என்றால் என்ன?
ஆழ்ந்த விவாதத்திற்கும், ஆய்விற்கும்
உலக அளவில் ஆராய்ச்சிக்கும் எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளாக தலைமை இருக்கிறது. தலைமை பற்றி எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தலைமை (விவாதம்) மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்பதால் இன்று எல்லோருடைய பார்வையும் இந்தியா மீதுள்ளது. இந்தியா இன்று புதியது. இருப்பினும் பழமை வாய்ந்தது.
. 1947 ல் சுதந்திரம் பெற்ற ஒரு இளைய நாடாக இருந்தாலும் அதனுடைய சரித்திரமும், கலாச்சாரமும், பாரம்பரியமும் 10000 வருடங்களுக்கும் மேலானது. எந்த நாட்டைப் போலவும் இந்தியாவும் இந்தியர்களும் தங்கள் கடந்த கால கதாநாயகர்களிடமிருந்தும், தலைவர்களிடமிருந்தும் அகத்தூண்டுதல் பெறுகிறார்கள்.
பில்லியன் மக்களுள்ள ஒரு நாடாக நாம் நம் தலைவர்களின் சாதனைகளுக்காகப் பெருமைப்படுகிறோம். காந்தி அசோகச் சக்ரவர்த்தி போன்ற தலைவர்கள் உலகம் முழுவதிலும் ஏராளமான தலைவர்களை உத்வேகம் தந்து உருவாக்கியிருக்கிறார்கள். சிவாஜி, சுபாஷ் சந்திர போஸ்.
சர்தார் படேல், ஜவாஹர்லால் நேரு. ராஜேந்திரப் பிரஸாத், லால் பஹாதுர் சாஸ்திரி போன்ற தலைவர்களும் சுதந்திரத்துக்காகப் போராடிய மற்றவர்களும் இன்றையத் தலைமுறையை ஊக்குவித்து அவர்களுக்கு தேசபக்தியை ஊட்டியிருக்கிறார்கள். இன்னும் அதிகமாகப் பிற்காலத்திற்குச் சென்றோமானால், கிருஷ்ணர், ராமர், புத்தர் போன்ற அதி உன்னதக் காவிய நாயகர்களை ராமாயணம், மகாபாரதம் போன்ற மகாகாவியங்களில் காண்கிறோம். இந்தியர்களுக்கு இந்தப் பாடங்கள் அவர்களுடைய சிந்தனை. அன்றாட வாழ்க்கை மற்றும் கலந்துரையாடல்களில் இன்றியமையாத ஒரு பகுதி எனக் கூறலாம்.
இருப்பினும் இந்தியாவின் ஒரு சிறப்பானவிஷயம் என்னவென்றால் நாம் அந்தத் தலைவர்களை உருவாக்கியவர்களிடமிருந்தும் - தலைமைக் குரு விடமிருந்தும் - கற்றுக்கொள்கிறோம். தலைவர் முக்கியமானவர், ஆனால் தலைவரை உருவாக்கியவர் அதிமுக்கியமானவர். ஏனெனில் தலைமையின் குருவினால் இன்னும் அதிகமான தலைவர்களை உருவாக்க முடியும்.
சுவாமி ராமதாஸ் சிவாஜியை ஒரு வெற்றிகரமான அரசனாக்க வழிகாட்டினார்.
விவேகானந்தர் ஒரு மகத்தான ஆன்மீகத் தலைவராக பகவான் ராமகிருஷ்ணர் வழிவகுத்தார்.
சிலர் தலைவர்களை ஆராய விரும்புகிறார்கள். இந்த ஆசிரியர் தலைமை குருக்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
தலைமை குருக்களில் மகத்தான தலைமை போதனைகளைத் தந்தவராக ஒருவர் தலை தூக்கி நிற்கிறார். அவர் தான் சாணக்கியர்.
சாணக்கியர், மௌரிய வம்சத்தின் முதல் மன்னனான, புத்தரின் பொன்னான போதனைகளை உலகெங்கும் பரப்பிய அசோகச் சக்ரவர்த்தியின் பாட்டனாரான, சந்திரகுப்த மௌரியரின் குரு.
உலக சரித்திரத்தில் முதன் முதலாக தேசம் அல்லது ராஷ்டிரம் என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் சாணக்கியர் என்று பல சரித்திரப் புலவர்கள் அவரைப் போற்றுகிறார்கள்.
அவருடைய போதனைகளில் சில கி.மு.நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் என்ற அவர் நூலில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
(கடந்த சிலவருடங்களாக அர்த்தசாஸ்திரத்தின் மாணாக்கனாகவும் ஆசிரியராகவும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் இருந்து வருகிறார்.)
#####
இந்த புத்தகத்தில் சாணக்கியரின் முக்கியமான ஏழு தூண்கள் குறித்து அருமையாக விளக்கப்படுகிறது .
முழுமையாக உள்வாங்கி கைப்பிடித்தால் கடைபிடித்தால் வாழ்வில் உன்னதம் பெறலாம்.
சாணக்கியரின் தலைமையின் ஏழு தூண்கள்.
அர்த்தசாஸ்திரத்தின் புத்தகம் 6, அத்தியாயம் 1, செய்யுள் 1 ல் சாணக்கியர் இந்த தலைமை மாதிரியை விவரிக்கிறார்.
"சுவாமி,
அமாத்யா,
ஜன்பதா,
துர்க்,
கோஷா,
தண்ட்,
மித்ரா
இதி ப்ரக்ரித்ய" (6.1.1.)
இதன் அர்த்தம் அரசர், மந்திரி, நாடு, அரணுள்ள நகரம், கருவூலம், சேனை, மேலும் நட்பு நாடுகள் இவையனைத்தும் ஒரு தேசத்தின் அடிப்படைக் கூறுகள்.
எந்த அரசாட்சியும் ஏழு அங்கங்களாக வகைப் படுத்தப்படலாம். அவைகள் ஒருங்கிணைந்தால் அரசாங்கம் முழுமை பெறுகிறது.
சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள்
ரகசியம்
எதைக் குறிப்பிடுகிறது
இன்று ஒரு நிறுவனத்தில்
1.சுவாமி: அரசர் (தலைவர்)
2 அமாத்யா: மந்திரிஆலோசகர்கள் மேலாளர் அதிகாரிகள், மேலாளர்)
3 ஜன்பதா :நாடு (குடி மகன்கள்)
4 துர்க்: கோட்டை (வீடு)
5 கோஷா: கருவூலம் (பணம்)
6 தண்ட் : ராணுவம் (குழு)
7. நண்பர்கள் : நட்பு நாடு
தலைவர்
(தலைவர் மேலாளர்
விற்பனை/ நுகர்வோர்
அடிப்படை வசதிகள்
நிதி
குழுப் பணி
ஆலோசகர்கள் / அதிகாரிகள்)
ஒரு மகிழ்ச்சியான அரசாட்சியெனில் அங்கு ஒரு சிறந்த தலைவர், (சுவாமி), அவருக்கு வழிகாட்ட திறனுள்ள மந்திரிகள் (அமாத்யா), குடிமகன்களுக்கு (ஜன்பதா) தேவையான அடிப்படை வசதிகள் (துர்க்), நாட்டிலும் நாட்டு மக்களுக்கும் போதிய செல்வங்கள் (கோஷா), அதைப் பாதுகாக்க ஆற்றலுள்ள ராணுவம் (தண்ட்), உதவி புரிய நண்பர்கள் / நட்பு நாடுகள் (மித்ரா) ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்திருக்கும்.
இந்த மாதிரி நமக்கு தலைமையின் ஒரு ஒட்டு மொத்த காட்சியை விளக்குகிறது. தலைவர்கள் வனத்தைக் காண வேண்டும். ஆனால் நம்மில் அனைவர் மரங்களை மட்டுமே காண்கிறோம்.
ஒரு நிறுவனத்தில் தகவல் நுட்ப இலாக்காவில் பணி புரியும் ஒருவர் தன் பகுதியைச் சார்ந்த பிரச்சினைகளை மட்டும் கவனித்துக் கொள்வார். கணக்கு இலாக்கா நிதி சார் எண்ளை மட்டுமே காணும். வாணிபம் மற்றும் விற்பனைக் குழு நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கவனம் செலுத்தும். உற்பத்தி இலக்கா எத்தனை எண்ணிக்கைப் பொருள்கள் தயாரித்தோம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். இது ஒரு நிறுவனத்தைப் பாகம் பாகமாகப் பார்ப்பது.
எந்த அரசாட்சியும் ஏழு அங்கங்களாக வகைப் படுத்தப்படலாம். அவைகள் ஒருங்கிணைந்தால் அரசாங்கம் முழுமை பெறுகிறது.
சாணக்கியர் ஒரு நாட்டுக்காக வகுத்த ஏழு அரசியல் ரகசிய நிர்வாக தூண்களை இந்த ஆசிரியர் இன்றைய நிர்வாகத்திற்கு ஏற்றவாறு வகைப்படுத்தி மொழிபடுத்தி நமக்கு அளிக்கிறார் .சிறப்பாக உள்ளது இந்த புத்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக