2 அக்., 2023

குட்டிக்கதை

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்….

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
உடனே ஒரு ஆப்பிளைக் கடித்து விட்டாள்…பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்... தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்.. அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ இதை எடுத்துக்க என்றாள்…

நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.

ஆனால், ஒருவரை பற்றிக் கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரைபற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.

உங்களுக்காக இன்னொரு கதை🙂🙃

வீதியொன்றில் கீரை விற்றுக்கொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.

”ஒரு கட்டுக் கீரை என்ன விலை….?””

“ஐந்து ரூபாய்”

ஐந்து ரூபாயா ….???

மூன்று ரூபாய் தான் தருவேன். மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ”

“இல்லம்மா வராதும்மா”அதெல்லாம் முடியாது.

மூன்று ரூபாய் தான்… பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு “மேல ஒரு ரூபாய் போட்டு கொடுங்கம்மா” என்கிறாள்”

முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான் தருவேன்”… என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்குப் பிறகு “சரிம்மா உன் விருப்பம்” என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

“என்னடியம்மா காலைல ஏதும் சாப்பிடல…?” என்று அந்த தாய் கேட்க”

இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்”

“சரி. இரு இதோ வர்றேன்.” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். ” இந்தா சாப்ட்டு போ” என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்.. “ஏம்மா ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய்ன்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு முப்பது ரூபாய் வருதும்மா…..? என்று கேட்க

அதற்கு அந்த தாய், “வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா” என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம்…!

கருத்துகள் இல்லை: