26 அக்., 2023

நூல் நயம்

"நினைவோடை ".
சுந்தர ராமசாமி ராமசாமி காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு 2019 மொத்த பக்கங்கள் 84 விலை ரூபாய் 100 தொகுப்பு ஆசிரியர் அரவிந்தன்.

   #இது ஒரு கட்டுரை புத்தகம் .
         சுந்தர ராமசாமி அவர்களின் நினைவில் பதிந்த பதிவுகள்.
சுந்தர ராமசாமி அவர்கள் சந்தித்த பழகிய மௌனி வே சாமிநாத சர்மா என் எஸ் கிருஷ்ணன் அவர்களை குறித்த நினைவுகளை இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர் சொல்லச் சொல்ல அரவிந்தன் அவர்கள் தொகுத்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

**
         தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதே சு.ரா.வின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமும் பயனும். 

      இந்நூலில் எழுத்தாளர் மௌனி, சிந்தனையாளர் வெ. சாமிநாத சர்மா, திரைக்கலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 
             ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்களான இந்த ஆளுமைகளைத் தோழமையுடனும் சமரசமற்றப் பார்வையுடனுமே அறிமுகப்படுத்துகிறார். சு.ராவைத் தவிர வேறு எவரால் "இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிர்ச்சிகளைக் குறைக்கவும் அவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்'' என்ற அனுபவ வாசகத்தைச் சொல்ல முடியும்?

***

       பல முக்கியமான ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பும் உறவும் கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மௌனி, வெ.சாமிநாதசர்மா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடனான தன் உறவின் நினைவுகளை ஆக இங்கு பதிவு செய்கிறார்.

சு.ரா.வின் தீவிர வாசகரான அரவிந்தன் அவரைச் சந்தித்து உரையாடிப் பதிவுசெய்ததைப் பிரதி எடுத்தவர் கமலா ராமசாமி.

நினைவோடை வரிசையில் பதின்மூன்றாவது நூல் இது. இதே வரிசையில் வந்துள்ள க.நா.சு., சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, பிரமிள் குறித்த பதிவுகள் அனைத்தும் சுந்தர ராமசாமியால் பார்வையிடப்பட்டுச் செம்மைப் படுத்தப்பட்டவை. அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த ஜி.நாகராஜன்,தி.ஜானகிராமன், கு. அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், நா.பார்த்த சாரதி, ந.பிச்சமூர்த்தி பற்றிய பதிவுகளும் இந்தப் பதிவும் உரையாடலின் எழுத்து வடிவமாக அமைந்தவை.

***

     முன்னுரையாக கீழ்க்கண்டவாறு சுதந்திர ராமசாமி அவர்கள் கூறுகிறார்.

    "இந்நினைவுக் குறிப்புகளை நான் நண்பர் அரவிந்தனிடம் சொல்லும்போது என் நினைவை மட்டும் அடிப்படையாக வைத்தே சொல்லி யிருக்கிறேன். சொன்ன நேரத்தில் நினைவுக்கு வந்தவை மட்டுமே இதில் இடம்பெற்றிருக் கின்றன. இந்நினைவுக் குறிப்புகள் புத்தக உருவம் பெற்றுப் படிக்க நேர்ந்தபோது, சொல்லாத சில நினைவுகளும் மனதிற்குள் வந்தன. அவற்றை எழுதிச் சேர்க்க அவசியமான சமய வசதி எனக்கு இப்போது இல்லாமல் இருக்கிறது.

      பல எழுத்தாளர்களுடனான முதல் சந்திப்பு என் நினைவில் போதிய தெளிவுடன் இல்லையோ என்று சந்தேகப்படுகிறேன். ஒருசில வருடங்கள் துல்லியமாக இல்லாமலிருக்கலாம். அதிகபட்சம் அவை ஒன்றிரண்டு வருடங்கள் முன்பின்னாக அமைந்திருக்க வாய்ப்புண்டு."என்கிறார்
சுந்தர ராமசாமி அவர்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: