"பூபாலத்திற்கு ஒரு புல்லாங்குழல் " வெ.இறையன்பு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு முதல் பதிப்பு 2006 மொத்த பக்கங்கள் 120 விலை ரூபாய் 50.
#இது ஒரு கவிதை புத்தகம்.
இந்த புத்தகத்தில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பல கவிதைகள் எழுதப்பட்டு இருக்கிறது.
1.நெடுநாள் சந்தேகம்
2.குற்றம்
3. அகலாத அழுக்குகள்
4.சிறகுகள் சிதைந்தன
5.விழிகளின் வெளிச்சத்தில் இதழ்கள் உதிர்கின்றன ஒவ்வொன்றாய்
7விபத்துகள் தொடரட்டும் தங்கப் பிரம்புகள்
9விரதம்
10.தொற்று நோய்
11.நார்களே கர்வப்படுகின்றன 12. பனித்துளிப் பார்வைகள்
13.நிறவெறிக்குக் கறுப்புக் கொடி 14. வாய்மை
15.மலர்கள் மெளனம் அனுஷ்டிக்கின்றன
16.தனிக்கட்சி 17. சருகுகள் சலசலக்கின்றன
18துலாக்கோல்களே ! 19.கையூட்டு
20. தன் பங்குக்கு
21. திட்டம்
22.ஆளுகை
23. விரலைக் கிள்ளும் நகம் 24. மெளனிகள் ஊமைகளல்ல!
25.கண் கெட்ட பிறகு
26. ஆத்திகமும் நாத்திகமும்
27.தனியனாய் மீண்டும்
28. வெட்கி மங்கும் விளக்குகள்
29.தணிக்கைத் தடைகள்
30. இந்தப் புல்லாங்குழல் ஒரு பூபாளத்திற்காக
31.தாரத்தின் பின்னே
32. வாக்காளர்கள்
33.திரை மறைவில்
34. பெண் பார்க்கும் படலம்.
35. முகமூடிக்கேற்ற முகம்
36.கைங்கர்யம்.
37.உனக்குமோர் ஒப்பாரி
38.தாமரை இலை மீது தண்ணீராய்
39. உதைக்கும் உவமை
40. பகலில் நட்சத்திரங்கள்
41.தற்கொலை 42. உன்னிலிருந்து தொடங்கு
43. ஒரு கல்லின் க(வி)தை பட்டிமன்றங்கள்
45. பனித்துளியில் பாற்கடல் 46.
47.பொதுவுடைமை எதிர்காலச் சூரியன்
48. விண்ணில் வளருமா வேர்கள்
50.வண்ணத்துப்பூச்சி கூட்டுப்புழுவாய்
49. வெளிச்சத்திற்கு வெள்ளையடிக்கிறார்கள் சுமைகள் குறைவதில்லை
50 அஞ்சல் வழிக் கல்வி
51இறுதி மரணம் 53. மரணம் தந்த ஜனனம்
55.ஏழ்மை
56. விபத்து
57. ஓய்வு நேர ஆய்வு
58.விசாரிக்கப்படாத விலாசங்கள் 59.முதிர்ச்சி
60. ஜன்னல் திரைகள்
61.கண்ணீர்த் துணிகள் 62.தவணையில்
63.காலதாமதம்
64 கனியும் காத்திருப்புகள்
65விமோசனம்
சாதாரண இந்தியன்
66. விபரீதம்
மாநாகரக் கல்வி முறை விழிக்க ஒரு தாலாட்டு
67. 68.
69. விழியில் ஒரு நீரூற்று 70.விண்வெளியில் கால்தடங்கள்
71. விழியில் விரிசல்களா ?
72.தன்மானத்தின் விளிம்பில்
73.நஷ்டப்பட்டது நான் மட்டுமே
*""
B'பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்' என்னும் இந்நூல் ஒரு கவிதைப் பூஞ்சோலை.
இச் சோலையில் மலர்ந்துள்ள மலர்களைக் காட்டிக்கொடுத்து இது வாசனையுடையது.
இது வாசனை இல்லாதது என்று சொல்லிக்காட்ட வேண்டிய நிலை இல்லாமல் எல்லா மலர்களுமே வாசனை பரப்பி மணம் கமழச் செய்கின்றன. மணம் கமழச் செய்திருப்பவர் எழுத்துலகில் முன்னணியில் திகழும் வெ. இறையன்பு ஆவார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் அவர் சமுதாயத்தைப் பல கோணங்களில் அணுகி, பார்வையிட்டு, அனுபவித்துப் பல கவிதை வரிகளை வார்த்துத் தந்திருக்கிறார்.
நெருங்கிப் பழகியவர்களிடத்திலும், தூரத்தில் இருப்பவர்களிடத்திலும் நேர்மையான அரசு அதிகாரி என்ற பெயரை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் இறையன்பு அவர்களிடம் ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்கும் துடிப்புணர்வு மேலோங்கி நிற்கிறது. அழுக்குப்படாத நிர்வாகம், விளம்பரம் இல்லாத அரசியல், துன்பங்களை எதிர்கொள்ளும் துணிச்சல், பிறருக்குப் பாதிப்பு இல்லாத பெருந்தன்மை, கர்வப்படாத கனிந்த மனம், நிற இன வெறி இல்லாத நெறிமுறை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் கருதுகோள், தாய்மையின் மேன்மை, காதலின் மகிமை, பக்குவப்பட வேண்டிய
பக்தியின் நிலை,
உயர்வு- தாழ்வில்லாத உணர்வுநிலை, காலத்தால்
சமுதாயக் கண்ணோட்டம் ஆகியவற்றைக் கவிதை வரிகள் கற்றுத்தருகின்றன. கணவன்-மனைவியின் மேம்பட்ட உறவுநிலை,
செய்யவேண்டியவை, தவிர்க்க முன்னேற வேண்டிய தேவைகள், ஒழிக்கப்பட வேண்டிய பெண்ணடிமைத்தனம், கற்கவேண்டியவை, கற்றுக்கொடுக்கப்பட வேண்டியவை, பயனுள்ள திட்டங்கள், உண்மையான உழைப்பு, விழிப்புணர்வு வேண்டியவை ஆகியவற்றை இந்நூல் பயிற்றுவிக்கிறது.
நாகரிக கவிதைகளுக்கு ஏற்ற வரைபடங்கள் நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஓவியர் கோபன் அவர்கள் தனது கைவண்ணத்தை இக்கவிதை நூலில் சிறப்புறப் பதிவு செய்திருக்கிறார்.
*****"*
ஒரு சில கவிதைகளை பார்ப்போம்
1)
கையூட்டு
கையைக் கழுவாமலேயே முகத்தைக்
கழுவ முற்படுவதனால்
அழுக்கு இன்றும்
அப்புறப்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
2)
பொதுவுடைமை
எல்லாரும் பொதுவுடமைவாதிகளாய்
இங்கே
மாறுவது
தம்மை விடப்
பணக்காரர்களைப்
பார்க்கும் போது மட்டும்தான்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக