.கலிலியோ மண்டியிடவில்லை ".
எஸ் .ராமகிருஷ்ணன் எழுதி,உயிர்மை பதிப்பகம் வெளியீடு. விலை ரூபாய் 85 முதல் பதிப்பு 2011 இரண்டாம் பதிப்பு 2014 மொத்த பக்கங்கள் 104...
ஆசிரியர் குறிப்பு:
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தார். முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார் .ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள் ,உபபாண்டவம் நெடுங்குருதி உறுபசி யாமம் துயில் நிமித்தம் சஞ்சாரம் இடக்கை , முதலான நாவல்களும் ,கட்டுரை தொகுப்புகள், திரைப்பட நூல்கள் ,குழந்தை நூல்கள் உலக இலக்கியப் பேருரைகள், வரலாறு, நாடகத் தொகுப்பு ,நேர்காணல் தொகுப்பு மொழிபெயர்ப்புகள் ,தொகைநூல் என்று ஏராளமான எழுத்தாக்கம் செய்திருக்கிறார் சாகித்ய அகாடமி விருது சஞ்சாரம் நூலுக்காக பெற்றிருக்கிறார்.
#######
எஸ் . ராமகிருஷ்ணன் அவர்கள் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
அறிவியலோ, இலக்கியமோ
எதுவாகிலும் கற்பனை தான் அதன் ஆதாரம் .ஆகவே கற்பனையான ஜீவராசிகளில் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்து கொள்ள முயல்வதே இந்த கட்டுரைகள் . அதிகம் விவாதிக்கப்பட்ட இந்த கட்டுரைகள் அறிவியல் இலக்கியம் சினிமா கவிதை என்று நான்கு தளங்களில் பொது புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது ," என்கிறார் ராமகிருஷ்ணன் அவர்கள்.
அறிவியல் குறித்த எனது
ஈடுபாடுகளுக்கு லூயி கரோல், ஜோர்ஜ் லூயி போர்ஹே இருவருமே காரணம் ஆவார்கள். இந்த இருவரின் எழுத்தின் வழியாகவே அறிவியலின் நுட்பங்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
அறிவியல் அறிஞர்களின் மறைக்கப் பட்ட வேதனைகளும் அதிகார அடக்குமுறைகளும் அடங்கிய பெரும் மானுட ஆவனமாகவே அறிவியலின் வரலாறு இருக்கிறது.
அறிவியல் பயன்பாடுகளை தினசரி வாழ்வில் உபயோகித்து பழகிய நாம் அதன் பின்னுள்ள மனித அறிவின் வியப்பான சாதனைகளை ,பெரும் போராட்டத்தை அறிந்து கொள்ளவே இல்லை.
இந்த கட்டுரைகள் யாவிலும் கணிதம் சார்ந்த எனது கவனம் முதன்மைப்படுத்தி இருக்கிறது.
காரணம் கணித அறிஞர்கள் மெய்ஞானிகள் போல நடந்து கொண்டிருக்கிறார்கள் .பிரபஞ்ச உண்மைகளை பேசியிருக்கிறார்கள்.
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள ஓசில் என்ற பூனை , புலனி என்ற பறவை , ஏகா என்ற தவளை ,ஐசி என்ற வண்டு ஆகிய நான்கு கற்பனை ஜீவராசிகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன் .அவை என் இணைபிரியாத தோழர்கள் என்கிறார் தனது முன்னுரையில்எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
######
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
இந்த புத்தகத்தில் மொத்தம் பதினோரு கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது .
1)நல்லது நண்பரே நீங்கள் பேசலாம் .
2)ஒரு ஸ்பூன் முட்டாள்தனம்.
3)இரண்டு கலகக்காரர்கள்.
4) தஸ்தாயேஸ்கின் கேள்வியும் ஐன்ஸ்டீன் பதிலும் .
5)எழுத்தில் உலவும் புலிகள் . 6)அறியாமையின் அறிவியல்.
7)மரம் ஒருபோதும் மரமாக இருப்பதில்லை .
8)வரலாற்றின் துரோகம்..
9) எண்கள் மட்டும் கணிதம் அல்ல..
10) பரிணாமவியலின் புதிய நாயகன் 11)கலிலியோ மண்டியிடவில்லை.
என்று மொத்தம் பதினோரு கட்டுரைகள் இந்த புத்தகத்தில் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.
கலிலியோ உலகில் கற்பனையான எவ்வளவோ மிருகங்கள், தாவரங்கள், பறவைகள் இருக்கின்றன. அது போல எனக்கு நண்பர்களாக உள்ள சிலரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன் என்று ஆசிரியர் கீழ்க்கண்ட நான்கு கற்பனைப் பாத்திரங்கள் அறிமுகம் செய்கிறார்.
1)ஓசில் - ரோமிலுள்ள பிரமாண்டமான நூலகத்தில் வசிக்கும் பூனை.
2)ஏகா - ஜப்பானில் சரொமா ஏரியில் வசிக்கும் தவளை
3)ஐசி - நிறையக் கண்களுடைய வண்டு
4)புலனி - ஆயிரம் வயதைக் கடந்த பறவை! -
இவர் கள் மூலமாக தான் "கலிலியோ மண்டியிடவில்லை" எனும் அற்புதமான நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்.
அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் நல்முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அதில் ஓசில் கூறுகிறதாம் : "மதம் வெட்கங்கெட்ட ஒன்று. அது நேற்று வரை அத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் எதிர்த்து விஞ்ஞானிகளைத் தீயிட்டு எரித்துவிட்டு இன்று அதே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி தன்னை விருத்தி செய்து கொண்டிருக்கிறது".
1) நல்லது நண்பரே நீங்கள் பேசலாம்::
முறைப்படி இல்லாமல் 3 மகள்களை பெற்ற கலிலியோ எவ்வாறு வளர்ப்பதற்கு சிரமப்படுகிறார் என்று ஆசிரியர் விவரிக்கிறார்.
மதத்தோடு முரண்பட்டாலும் தனது இரண்டு மகள்களையும் கன்னியாஸ்திரியாக அனுப்பிவிடுகிறார் .
வாழ்க்கை என்பதே முரண்பாடு நிரம்பிய தானே என்கிறார் ஆசிரியர்.
பெரிய மகள் 124 கடிதங்கள் தந்தைக்கு எழுதி இருக்கிறார் .
Deva Sobel என்ற பெண் எழுத்தாளர் மரியாவிற்கும் மற்றும் கலிலியோவுக்கும் ஆன உறவைப் பற்றி கலிலியோவின் மகள் Galileo's daughter என்ற ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
ஏகா அனுப்பிய குறுஞ்செய்தியில் சார்லஸ் சிமிக்கின்( Charles Simic )கவிதை இப்படி சொல்லுகிறது.
தர்ப்பூசணிப்பழங்கள்
பச்சை நிறப் புத்தர்கள்
பழமேடையெங்கும்
நாம் அதன் சிரிப்பைத் தின்று
பற்களைத் துப்புகிறோம்
ஐசி மின் வண்டு Starless night என்ற குறும்படத்தை பார்க்க சிபாரிசு செய்கிறது.
###
2) ஒரு ஸ்பூன் முட்டாள்தனம்:.
Perfectly reasonable deviations from the beaten track: the letters of Richard P.Feynman..
என்ற புத்தகத்தை வழக்கம்போல ஓசில் என்ற பூனை ஆசிரியருக்கு நீட்டியது.
அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று இருக்கிறது .அந்த கடிதம் அவரது மனைவி இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது .கடிதம் முடிவில் "அன்பே நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்று தெரியாமல் போனதால் உனக்கு இந்த கடிதத்தை அனுப்ப முடியாமைக்கு வருந்துகிறேன் "என்று பெயின் மேன் கையெழுத்திடுகிறார்.
ஒரு விஞ்ஞானியால் எழுதப்பட்ட அற்புதமான காதல் கடிதம் அது.
நீ விரும்பினால் ஒரு தமிழ் எழுத்தாளராகிவிடலாம் என்கிறார் எஸ்.ரா ஐசி என்ற வண்டிடம்.
அதற்கு வண்டு சொல்கிறதாம் "என்னைத் தயவு செய்து கேவலப்படுத்தாதே. நான் ஒரு கெளரவமான பூச்சியாக இருக்கிறேன். அது நிச்சயம் உன்னைவிட மேலானது என்று..
கலாப்ரியாவின் இணையப்பக்கத்தில் *அம்மா* என்ற கவிதை பிபி ராமேந்திரன் என்ற மலையாள கவிஞர் எழுதியது.
"அம்மா
, உன் பாத்திரத்தை
நிறைக்க
அருவிக்கு
ஒரு புன்னகை போதும்"
#####
3) இரண்டு கலகக்காரர்கள்:
சதீஷ் இப்போது அவை குறித்து இறுதியில் சொல்லப்படுகிறது இவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் தான் அப்படி பேச வைக்கப்பட்டது.
my God died young ...
confessions of an Indian lover...
####
கலிலியோ மண்டியிடவில்லை.
The man who loved only numbers .Paul Erdos
எழுதிய இந்தப் புத்தகத்தில் கணிதமேதை தன்னைத்தானே பகடி செய்து கொள்கிறார் தன்னை தானே பகடி செய்து கொடுப்பது கலையின் உச்ச நிலை தனது பெயருக்குப் பின்னால். L.D. எல் டி எல் டி என்று போட்டுக் கொள்வார்.
குறிப்பு என்னவென்றால் 60 வயதில் லிமிடெட் 70 வயதில் அடுத்த மார்க்கெட் என்பது வயதில் சிடி பட்டம் அதன்பொருள் கவுன்சில் எப்படி தன்னை வெளிப்படையாக கேலி செய்து கொள்வது அவரது இயல்பு இவர் கணித மேதை ராமானுஜத்தை தலையில் வைத்துக் கொண்டாடிய அவர் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் இன்பத்தைவிட கணிதப் உயர் கணித புதிர் அதிகக் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியது என்கிறார்.
இந்த கட்டுரையில் சுற்றுச்சூழலை குறித்து அதிகமாக எழுதி இருக்கிறார் நெல் ஆராய்ச்சியாளர் ரிச்சாரியா மரபு விதைகளை காப்பாற்ற முனைந்து வணிக கம்பெனிகளின் நெருக்கடி அரசியல் அதிகார சூழ்ச்சியின் காரணமாக முடக்கப்பட்டார் என்பதை பதிவுசெய்கிறார்.
இறுதியில் எஸ்ரா அவர்களின் ஜப்பானில் வசிக்கும் தவளை நண்பன் யாரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது. கூழாங்கல் என்கிற கவிதை குறித்து.
ஒரு கூழாங்கல்
ஒரு கூழாங்கல்லை
வாயில் போட்டுக்கொண்டேன்
அது இதுவரை தான் சார்ந்திருந்த
மண்ணின் சுவையை
நாக்கில் தடவுகிறது .
மண்
கல்லின் சுவையைத் தக்கவைத்துக்கொண்டிருக்குமா என
ஒரு கூழாங்கல் யோசிப்பதேயில்லை .
மனுஷ்யபுத்திரன்.
######
எனக்கு ஏன் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை அதிகமாக பிடிக்கும் என்று காரணத்தையே பல பதிவுகளில் பதிவு செய்திருக்கிறேன் .அந்த காரணம் இந்தப் புத்தகத்திலும் நிஜமாகிப் போகிறது.
நிறைய விஞ்ஞானிகளையும், இலக்கியவாதிகளையும், நூல்களையும், சினிமாக்களையும் இந்நூலில் விவரிக்கிறார் எஸ்.ரா. .
இந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் பல புத்தகங்களை படிக்கலாம் ;பல திரைப்படங்களை பார்க்கலாம் ;பல விஞ்ஞான நுட்பங்களை அறிவியல் மாற்றங்களை சரித்திர உண்மைகளை ஒருங்கே தெரிந்துகொள்ளலாம்.
புத்தகம்.
A Mathematicians apology ..Hardey
Silent Spring ..by. Rachel Carson
The man who loved only numbers..Paul Erdos
Galileo's Daughter by Dava Sobel
Perfectly reasonable deviations from the beaten track: the letters of Richard P.Feynman
My God died young ...
confessions of an Indian lover...
On the origin of the species..
The voyage of the Beagle..
Surely you are joking Mr payment ..
what do you care what other people think.
பெர்ட் டோல்ட் பிரக்டின் நாடகம்.
Starless night
The Fox and the child directed by Luc Jacquet.
Infinity
A film about Anna Akmatova..
Creation....
The Boy, The Slum And The Pan's Covers directed by Cao Haburger.
இவற்றில் 20 சதம் புத்தகங்களையும் திரைப்படங்கள் அத்தனையையும் பார்த்துவிட்டேன், படித்துவிட்டேன் .நாடகம் தான் பார்க்கவில்லை.
ஆம் .
உண்மையில்,
* கலிலியோ மண்டியிடவில்லை * .
கலிலியோ போன்ற விஞ்ஞானிகளுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உலகமக்கள் நாம்தான் மண்டியிட்டு வணக்கத்தையும் மரியாதையையும் செய்துகொண்டிருக்கிறோம், காலம் தவறிப் போனாலும் கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக