வாயு கன்னிகை ."
வி. ஸ.காண்டேகர் .
தமிழாக்கம் கா ஸ்ரீ ஸ்ரீ .அலையன்ஸ் பதிப்பகம். முதல் பதிப்பு 1996 விலை ரூபாய் 55 மொத்த பக்கங்கள் 120.
இது ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகம்.
1. வாயு கன்னிகை
2. மினியின் தாய்
3.கடல்
4. நாய்க் குட்டி
5. இயற்கையின் வஞ்சம்
6. பணங்காய்ச்சி மரம்.
தன்னலமற்ற சீர்திருத்தக்காரரும், எளியோரிடம் மிகுந்த பரிவுள்ளவருமான ஆகர்கர் என்பவரின் தொண்டு மனப் பான்மை இவருடைய உள்ளத்தை ஈர்த்தது. எனவே இவர் சிரோட் என்ற ஊரில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிய முடிவு செய்தார், மாதச் சம்பளம் 25/- ரூபாய்தான் என்றாலும் ஆர்வத்துடன் பெரும்பாலும் குடிசைவாசிகளான தம் மாணவர்களுக்குப் பாடம் போதிக்கலானார். கடற்கரை, மலைச் சாரல் போன்ற இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று பல அரிய விஷயங்களை எடுத்துரைப்பார்.
ஆசிரியரைப் பற்றி
19.10898ல் எளிய மராட்டியக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் விஷ்ணு ஸகாராம் காண்டேகர் இவருடைய தந்தை அன்றைய பம்பாய் (இன்றைய மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் சுதேசச் சிற்றரசான ஸாங்க்லியில் அப்போது அரசு ஊழியராகப் பணியாற்றி வந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி பயின்றார். இளம் காண்டேகர் சாமானிய மாணவர்தாம் என்றாலும், 'நல்ல அறிவாளி' என்று இவர் பெயர் பெற்றார். அப்போதே புராண சம்பந்தமான நாடகங்கள் எழுதி, அவற்றில் நடிக்கவும் செய்தார். பின்பு 1913ல் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சிறப்பாகத் தேறினார்.
1916ல் இவரை, கொங்கணத்தில் ஓரளவு நிலபுலன் உள்ள சிறப்பா, தத்து எடுத்துக்கொண்டார்; அப்போது கணேச ஆத்மாராம் என்ற இவரது இயற்பெயரை விஷ்ணு ஸகாரா ஆக மாற்றினார்.
ஆயினும் கல்லூரிப் படிப்புக்குச் சிற்றப்பா உதவியாக இருப்பார் என்று இவர் எதிர்பார்த்து நிறைவேறவில்லை: எனவே, கீழ் வகுப்பு மாணவர்கள் சிலருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, அதில் கிடைத்த வரும்படியைக் கொண்டு புனே நகரக் கல்லூரியில் சம்பளம் கட்டிப் படித்தார்.
இவருடைய முதல் சிறுகதை 'வீட்டிலிருந்து' என்பது 1923ல் ''வைநதேய' என்ற மராட்டிய பத்திரிகையில் வெளியாயிற்று. 'இதயத்தின் அழைப்பு' என்பதுதான் இவரது முதல் நாவல். 1929 முதல் 1934க்குள் இவருடைய செல்வாக்கு மராட்டி இலக்கிய உலகில் ஓங்கலாயிற்று.
1934வாக்கில் காண்டேகர் ஆரவல்லி மலைக்குப் போய் இயற்கைக் காட்சிகளை ரசித்து வந்த சமயம் பாம்பு கடித்துப் படுத்த படுக்கயாகிவிட்டார். தக்க சிகிச்சை செய்து உடம்பு தேறினாலும் பாம்பின் விஷம் ஓரளவுக்கு உடலில் ஊறி விட்டதால் மேல் தோலில் பல இடங்களில் வெள்ளைத் திட்டுக்கள் தோன்றின.
1935ல் 'சாயா' என்ற திரைப்படக் கதை ஒன்றை எழுதிய போது இவருக்குக் 'கோஹர் பதக்கம்' தந்து கவுரவித்தார்கள். 1920 முதல் 1928 வரை சிரோடில் தான் இருந்து வந்தார். தம் ''வெறுங் கோயில்' என்ற நாவலின் திரைப்படக் கதையையும் அப்போதுதான் எழுதினார்.
பனாஜியில்தான் இவர் முதல் முதலாக இலக்கியச் சொற் பொழிவு ஆற்றினார். அதுமுதல் சிறந்த இலக்கியப் பேச்சாளர் என்று அறிஞர்கள் இவரை பாராட்டலானார்கள். வர வர உடம்பில் வெள்ளைத் திட்டுக்கள் அதிகமாகப் பரவவே ஓய்வு பெற்று வெளியிடங்களில் செல்வதை நிறுத்திக்கொண்டு இலக்கியப் படைப்பிலேயே முழுவதும் ஈடுபடலானார்.
மனித நேயமே அனைத்திலும் உயர்ந்தது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் காண்டேகர்.
1960ல் சாகித்திய அகாடமிப் பரிசும், 1968ல் 'பத்ம பூஷன்' விருதும், 1970ல் சாகித்திய அகாடமி இலக்கிய கர்த்தர்களுள் முக்கியப் பிரமுகர் என்ற கவுரவமும், 'யயாதி' என்ற இவ்வரிய நவீனத்துக்காக 1974ல் ஞானபீடப் பரிசும் இவரைத் தேடி வந்ததில் வியப்பொன்றும் இல்லை. அதே ஆண்டு கோல்ஹாபூர்
சிவாஜி பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது. 'யயாதி'யை எழுதி வருகையில் இவரது கண் பார்வை மங்கயிதால் இவர் சொல்லிக்கொண்டே போக, பிறர் அதை அப்படியே எழுதி வர நேர்ந்தது. மகளான சுலபா கபாடியின் இஸ்லாம்புர் இல்லத்தில் தங்கியிருந்தபோது 28.1976ல் இவர் காலமான செய்தி கேட்டு உலக இலக்கிய மேதை ஒருவர் மறைந்ததாகவே அறிஞர்கள் கருதி வருந்தினார்கள்.
****
காண்டேகர் எனும் சூறாவளி
வி.ஸ. காண்டேகர் எனும் ஒரு சூறாவளி 1940 வாக்கில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் மையம் கொண்டு, சிறிது சிறிதாக வலுப்பெற்று 1970 வரை மாபெரும் புயலாக வீசியது. இந்தப் புயலில் சிக்கித் தவித்த தமிழர்கள் ஏராளம். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். கலைஞர் கருணாநிதி, மு.வரதராசனார், திலகவதி IPS என ஆரம்பித்து, முடிவில்லா பட்டியலில் நடிகர் சிவகுமார் வரை மேடைதோறும் பேச வைத்த அந்தச் சூறாவளிதான் வி.ஸ. காண்டேகர்.
சமீப காலத்தில், அதாவது ஒரு பத்து ஆண்டுகளாக நம்மிடையே நெருங்கிப் பழகும் அன்பர் 'நந்தி அடிகள், தன்னுடைய சிறு வயதில் இந்தச் சூறாவளியில் சிக்குண்டு, தன் பெயரையே காண்டேகரின் கதாபாத்திரமான 'திலீபன்' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு வலம் வந்தவர். இவர் ஒருவர் தான் இப்படி என்று எண்ணாதீர்கள். பல தமிழர்கள் தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பெயர்களைத் தேடி அலையாமல், காண்டேகரின் கதாபாத்திரப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். சில தமிழர்கள் இன்னும் சில படிகள் மேலே போய், நேராகக் கோலப்பூருக்குச் சென்று, காண்டேகரைக் கண்டு, ஆசீர்வாதம் பெற்றனர். திருமண வைபவங்களில் இவரது நூல்கள் விநியோகிக்கப்பட்டன; பரிசுப் பொருள்களாக வழங்கப் பட்டன.
அந்தக் காலக்கட்டத்தில் காண்டேகரின் நூல்களைப் படித்தால்தான் பெருமை; காண்டேகர் நூல்கள் வீட்டில்
இருந்தால், அவர் மேதாவி; காண்டேகர் நூல்களை மேற்கோள் காட்டிப் பேசினால் அவர் அறிவாளி; காண்டேகர் நூல்களை அனைத்தும் படித்தவர், வானத்தைப் பார்த்துத்தான் நடப்பார். அவருக்கு தான் ஒரு பாரதியார் என்ற நினைப்பு வந்துவிடும். அவர்தான் மகா மேதாவி. இப்படியெல்லாம் அந்தச் சூறாவளி தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் புகுந்து புறப்பட்டது.
இதுவரை இந்திய எழுத்தாளர்கள் எவரும் தமிழர்களை இந்த அளவுக்குக் கவரவில்லை. காரணம் என்ன தெரியுமா?
காண்டேகர் மனித மனங்களை ஆராய்ந்து, சிந்திக்கச் செய்வார். அண்மையில் மறைந்த நடிகர், எழுத்தாளர் சிலோன் விஜயேந்திரன் தன்னுடைய பள்ளிப் பருவத்தில், யாழ்ப்பாண நூலகத்தில் காண்டேகரின் நூல்களைப் படித்து - தானும் அவர் போல் எழுதவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.
அறிஞர் அண்ணாதுரை தமிழகத்தின் முதல்வராக இருந்த போது, காண்டேகரின் புதிய நூலுக்கு முன்னுரை தருமாறு கேட்டபோது, காண்டேகர் எழுத்தையே மேற்கோள் காட்டி, அவர் சொன்ன ஒரே பதில், 'பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? காண்டேகரின் நூலுக்கு முன்னுரை எதற்கு?' அந்தச் சமயத் தில், அரசியல்வாதிகள், பேராசிரியர்கள் எல்லாம் மேடை தோறும் பேச காண்டேகரின் நூல்கள் வழிகாட்டின; வசதியை ஏற்படுத்திக் கொடுத்தன.
இப்படியெல்லாம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தச் சூறாவளி கொடுத்த மழை எனும் பொக்கிஷம்தான், 'மனித மனங்களை ஆராய்ந்து சிந்திக்க வைப்பது.' 'சரி! இந்தத் தாக்கத்தினால் சிக்குண்ட தமிழர்கள் சிந்தித்துவிட்டார்களா?
என்ற கேள்வி எழும்போதுதான், பதிலளிக்க முடியவில்லை.
இவருடைய கதைகளைப் படித்தால், ஏதோ ஒரு விஷயம் தெரிந்த முதியவர் நம்மிடையே பேசுவதுபோல இருக்கும். அந்தக் கதைகளில் உள்ள தத்துவ ரீதியான விஷயங்களைப் படிக்கும்போது, ஏதோ ஒரு ஞானி - பகவத் கீதை சொல்வது போல இருக்கும். ஆக, இவருடைய நாவல்கள், கதைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டால், மீண்டும் இன்றைய தலை முறையினரும் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
'பணம்' என்ற ஒரு பொருளைப் பற்றிப் பணக்காரன் சிந்தனை என்ன? ஏழையின் சிந்தனை என்ன?
'பெண்' என்பவளைப் பற்றி இளைஞன் சிந்தனை என்ன? முதியவரின் சிந்தனைதான் என்ன?
'ஆண்டவ'னைப் பற்றி ஞானியின் சிந்தனை என்ன? நாஸ்திகனின் சிந்தனை என்ன?
இப்படி ஒரே விஷயத்தை மனித மனங்கள் எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்கின்றன என்று தன் கதாபாத்திரங்களின் மூலம் விளக்கியிருப்பதுதான் காண்டேகரின் மகாத்மியம்.
இவருடைய நாவல்களில் ஜாதி, மத விஷயங்கள் இருக் காது; ஆனால், சோஷியலிசம் இருக்கும். விரசம் இருக்காது; ஆனால், உணர்ச்சிகளின் மதிப்பு மேலோங்கி இருக்கும். ஆக மொத்தம் நல்ல விஷயங்கள் பல இருக்கும். ஆனால், அனாவசிய படாடோபம் இருக்காது.
இந்த நாவல்களைப் படித்த பிறகு, 'வாழ்க்கை என்றால் என்ன?' என்று நீங்களே உணர்ந்து செயல்படுவீர்.
ரவீந்திரநாத் டாகுர் முதலில் வங்க மொழியில்தான் எழுதினார். ஆனால், அவருடைய கவிதைகளை அவர், வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் எழுதிய பிறகுதான், அவரை 'தமிழுலகம் பயனடைய நமது வாழ்த்துக்கள்.
உலகம் போற்றியது; நோபல் பரிசும் கிடைத்தது. அதேபோல காண்டேகரும் மராட்டியில்தான் எழுதினார். இவருடைய எழுத்துக்களின் மேன்மையைக் கண்ட கா.ஸ்ரீ. ஸ்ரீநிவாஸாச் சாரியார் என்கிற கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் மக்களிடையே உலவவிட்டு, தமிழர்களால் போற்றப்பட்ட பிறகுதான், காண்டேகருக்கு 'டாக்டர் பட்டம், ஞானபீட விருது, பத்ம பூஷன்' போன்ற பெரிய பெரிய விருதுகளெல் லாம் வீடுதேடி வந்தன. ஆக, மனித அறிவைக் காட்டும் விளக்குகளாக இவர்களெல்லாம் விளங்கினர்.
***
வாயு கன்னிகை.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் .இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிறது .திருமணம் ஆகி செல்கின்ற வீடு ஒன்று பணக்கார வீடு; மற்றொன்று ஏழை வீடு .
இப்படிப்பட்ட நிலையில் அந்த இரண்டு பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் .திருமணத்திற்கு முன்பு வரை அவர்கள் எப்படி மனம் ஒன்றி மனம் கலந்து நட்போடு பழகி அன்போடு பழகி இருந்தார்களோ அந்த நிலை திருமணத்திற்கு பிறகு நீடிப்பதில்லை .மனம் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது .
இருப்பவர்கள் இல்லாதவர்கள் கண்டு ஏளனம் செய்வது ,கடிந்து கொள்வது ,உதாசீனம் செய்வது போன்றவை இயல்பாக அமைந்து விடுகிறது .
அதைத்தான் வாயுவுக்கு பிறந்த இரண்டு பெண்கள் , ஒருத்தி சொர்க்கத்தில் இடம் பெறுகிறார் மற்றொருத்தி மரணம் சம்பவிக்கின்ற நரகத்தில் மணமுடிக்கப்படுகிறாள் .இருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை ஆசிரியர் அற்புதமான கற்பனை கலந்து எழுதி இருக்கிறார் .
உவமானங்கள் உவமேயங்கள் இலகுவாக ஆசிரியருக்கு கை வந்திருக்கிறது .ஆசிரியருக்கு அது கைவந்த கலை.
ஒரு முறையாவது அக்கா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தங்கை விரும்புகிறாள். அக்காவின் வீடு சொர்க்கம் ,வானுலகு மேகங்கள் சூழ்ந்த சொற்கலோகம் அக்கா அனுமதிப்பதே இல்லை.தங்கை
தங்கி இருப்பது ஒரு பூமி .வெப்பக்காடு. அனல் கொதிக்கும் காற்று கலந்த வீடு.
கால நிலை மாறும் பொழுது அக்காவின் நிலை மாறுகிறது .தங்கை நிலை உயர்கிறது என்பதாக கதை முடிகிறது .
இயற்கையிலும் இப்படி ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் தான் செய்கிறதோ?.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக