
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
29 ஜூன், 2025
28 ஜூன், 2025
26 ஜூன், 2025
இன்றைய புத்தகம்
இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு கால் உணர்வு உச்சத்திலும் நிலைகொண்டு அலைபாய்வது. இந்த நாவல், துறவிகளின வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாசாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்கவாவது முடியும். அது பாராவுக்குக் கை கூடியிருக்கிறது.
பொதுவாகவே இந்தியக் கலாசாரத்தின் பின்னணியில் விரியும் எழுத்துகள் படிக்கக் கடினமானதாகவும், தத்துவப் பின்னணியில் புரியாத மொழியில் எழுதப்பட்டவையாகவும் இருக்கும். ஆனால் பாராவின் எளிமையான எழுத்து இச்சிக்கல்களைப் புறம் தள்ளி, வாசகனைத் தனக்குள் இழுத்துக்கொள்கிறது.
நாம் அறியாத மரபானதொரு பேருலகினை, தகிப்பும் உக்கிரமும் ததும்பும் நவீன மொழியில் பதிவு செய்திருக்கும் யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் அசுர சாதனை.
பொதுவாகவே இந்தியக் கலாசாரத்தின் பின்னணியில் விரியும் எழுத்துகள் படிக்கக் கடினமானதாகவும், தத்துவப் பின்னணியில் புரியாத மொழியில் எழுதப்பட்டவையாகவும் இருக்கும். ஆனால் பாராவின் எளிமையான எழுத்து இச்சிக்கல்களைப் புறம் தள்ளி, வாசகனைத் தனக்குள் இழுத்துக்கொள்கிறது.
நாம் அறியாத மரபானதொரு பேருலகினை, தகிப்பும் உக்கிரமும் ததும்பும் நவீன மொழியில் பதிவு செய்திருக்கும் யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் அசுர சாதனை.
ஆன்மீக மஞ்சரி
*நெல்லை ஆனித் தேர்த்திருவிழா. 08/07/2025 அன்று
தென்தமிழ் நாட்டின். 450.டன் எடையில் முதலாவதாகவும்,
உயரத்தில் ,3.வது. பெரியதேராக உள்ள
அருள்தரும் அனனை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில்
ஆனிப்பெருந்தேர்த் திருவிழா.
30.6.2025. திங்கட்க்கிழமை காலை 6.மணிக்கு மேல் 7.05.மணிக்குள் கொடியேற்றுவிழாவும்
8.7.2025 செவ்வாய்க்கிழமை
காலை 8.30.மணிக்கு மேல் 9. மணிக்குள்
திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம்
நடைபெறும்.
25 ஜூன், 2025
கவிதை நேரம்
*சித்தர் சிவவாக்கியர் சிந்தனை*
சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்தி ஏது சம்பு ஏது சாதி ஏது பேதம் அற்ற தேது
முத்து ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது
வித்தில்லாத விதத்திலே இன்னதென்று இயம்புமே.
குட்டிக்கதை
உலகமகா பணக்காரர், கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார். உங்களை விடவும் பணக்காரர் எவராவது இருக்கிறாரா?”
அவரிடமிருந்து உடனே பதில் வருகிறது.
“ஆம். ஒருவர் இருக்கிறார்.
கேள்வி கேட்டவருக்கு ஆச்சரியம்.
“யார் அவர், நான் கேள்விப்பட்டதே இல்லையே?
பில்கேட்ஸ் தன்னுடைய கதையை ஃபிளாஷ் பேக்காக சொல்ல ஆரம்பித்தார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையிலிருந்து திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையத்தில் நாளிதழ்களில் .,
என்னவெல்லாம் தலைப்புச்செய்தி வந்திருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளிதழை வாங்க ஆசைப்பட்டேன்.
என்னிடம் அதற்குரிய சில்லறை இல்லாததால் வாங்கவில்லை.
அதை கவனித்துக் கொண்டிருந்தான் பேப்பர் விற்கும் கருப்பினச் சிறுவன்.
அவன் உடனே நான் வாங்க விரும்பிய நாளிதழை என்னிடம் கொடுத்தான்.
‘என்னிடம் சில்லறை இல்லையே?’ என்றேன்.
‘உங்களுக்கு என் அன்பளிப்பு’ என்று புன்னகையோடு சொன்னான்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்து மீண்டும் அதே விமான நிலையம். மீண்டும் அதே கதை, என்னிடம் சில்லறை இல்லை.
இம்முறையும் அதே சிறுவன்,
‘உங்களுக்கு என் அன்பளிப்பு’ என்று அதே புன்னகையோடு பேப்பரைக் கொடுத்தான்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிய நிலையில்,
நீங்களெல்லாம் குறிப்பிடும் வகையில் நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன் ஆகி விட்டேன்.
எனக்கு திடீரென அந்த சிறுவனை காண வேண்டும் என்று ஆவல் வந்தது. என் சக்திக்கு உட்பட்ட எல்லா வகையிலும் அவனை வலைவீசித் தேடினேன்.
ஒன்றரை மாத பெரும் தேடலுக்குப் பிறகு அவனைச் சந்தித்தேன்.
அவனைக் கண்டதுமே கேட்டேன். ‘என்னைத் தெரிகிறதா?’
‘உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில்கேட்ஸ்தானே?’ என்றான் அவன்.
இருபது வருடங்களுக்கு முன்பு அவன் எனக்கு இரண்டு நாளிதழ்களை அன்பளிப்பாக கொடுத்ததை நினைவூட்டினேன்.
அதற்கு கைமாறாக நான் ஏதாவது செய்யவேண்டும் என்பதால் அவன் என்ன கேட்கிறானோ அதை கொடுப்பதாக வாக்களித்தேன்.
அதே புன்னகையோடு அவன் சொன்னான்.
‘உங்களால் நான் கொடுத்த அன்பளிப்புக்கு ஈடு செய்யவே முடியாது.
’எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. ‘நான் பில்கேட்ஸ். உலகின் பெரும் பணக்காரன். என்னால் முடியாதது
எதுவுமே இல்லை.
என்ன வேண்டுமோ கேள்.’அவன் சொன்னான்.
‘நான் ஏழையாய் இருந்த போதே உங்களுக்கு உதவக்கூடிய மனம் எனக்கு இருந்தது.
நீங்களோ பணம் வந்த பிறகுதான் எனக்கு உதவ நினைக்கிறீர்கள். இரண்டு மனமும் ஒன்றா?’
அந்த நொடியில் அந்த கருப்பின இளைஞன்தான் உலகின் மிகப் பெரும் பணக்காரன் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
படித்ததில் பிடித்தது.
24 ஜூன், 2025
இன்றைய புத்தகம்
கையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :
உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.
சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும், மேலும் இந்நூல் சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூலாகவும் அமையக்கூடும்.
நாம் வாழும் பூமியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல்.
23 ஜூன், 2025
இன்றைய புத்தகம்
இன்றைய வாசிப்பு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் "வீடில்லாத புத்தகங்கள்". ஏனோ எனக்கு இப்பொழுதெல்லாம் கதை கதை கட்டுரை புதினம் நாவல் என்று படிக்க தோன்றுவதில்லை. என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்னென்ன புத்தகங்கள் எங்கெல்லாம் கிடைக்கும் என்று அவர் தன்57 கட்டுரைகளில் எழுதி உள்ளார். மொத்தத்தில் வீடில்லாத புத்தகங்கள் காடு இல்லாத வீடுகள்.எலி பசி போல , புழுபசி போல ,புத்தக பசி உள்ளவனுக்கு இது அருமையான புத்தகம். அருமையான பதிப்பு .
அருமையான புத்தகம் .
இரவு முழுதும் கண்விழித்து ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் .கற்றதும் பெற்றதும் போல இது ஒரு நல்ல அருமையான புத்தகம் .அனைவரும் தவறாமல் படித்து மகிழ வேண்டிய புத்தகம்.
நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்
குட்டிக்கதை
தன் மனைவியின் பிறந்த நாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான்.
முதலில் காரின் சாவியையும், பின்னர்,
அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்து விட்டு, அவளை ஆரத் தழுவினான்.
பின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும்,
அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான்.
அவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன் புதிய காரை ஓட்டிச் சென்றாள்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு உள்ளாகவே,
சாலையை இரண்டாக வகுக்கும் நடுப்பகுதியில் காரை மோதி விட்டாள்.
அவளுக்கு காயம் எதுவும் ஏற்படா விட்டாலும் கார் ஒடுக்காகி விட்டது.
குற்ற உணர்வு அவளைப் பற்றிக் கொண்டது.
அவரிடம் என்ன சொல்வது?
அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்? போன்ற கவலைகள் அவளை மொய்த்தன.
விபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது.
காவலர், "நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா?" என்று கேட்டார்.
நடுங்கும் கைகளுடன் தன் கணவர் கொடுத்த சிறு பையைத் அவள் திறந்தாள்.
கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடிக் கொண்டிருக்க,
ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள்.
அதன்மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.
அதில்,
"என் அன்பே!
ஒருவேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்,இதை நினைவில் வைத்துக் கொள். நான் நேசிப்பது உன்னைத்தான், காரை அல்ல. அன்புடன்!"
என்று எழுதப்பட்டிருந்தது.
பொருட்களை நேசிக்க வேண்டும்.
மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றில்லாமல்,
மக்களை நேசிக்க வேண்டும்.
பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
22 ஜூன், 2025
இன்றைய புத்தகம்
இன்றைய என் வாசிப்பு வண்ணநிலவனின் கடல்புரத்தில். வண்ணநிலவன் வண்ணதாசன் என்ற பெயரிலேயே ஒரு எனக்கு ஒரு கிரேஸ் எப்போதும் உண்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே படித்திருந்தாலும் இப்பொழுது மீண்டும் புதிதாக படிக்கின்ற அனுபவம் சுவையானது இன்பமானது. ஒருமுறை சுஜாதா அவர்கள் சுந்தர ராமசாமியைப் பற்றி குறிப்பிடும் போது இவர் எங்கேயோ போய் இருக்க வேண்டும் எழுதியிருக்கின்ற வண்ணங்களை பார்க்கும்போது சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்று கூறினார் .அதேதான் நானும் இவருக்கு கூறுகின்றேன் .சாகித்ய அகாடமி விருது பெறும் தகுதி நிறைந்த எழுத்துக்கள் இவருடையது.
அந்த கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் முலையை சுவைப்பதுகிடையாது. கருப்பான கடல் தண்ணீரை தான் .
அந்தத் தண்ணீரானது ஆண்பிள்ளை ஆனால் அவனுக்கு வ லிய காற்றோடும் கடலோடும் போராட உரம் அளிக்கிறது, பெண்பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் எதிர்ப்படும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது . அவர்களுடைய வாழ்க்கை அநாதி காலந்தொட்டு பின்னிப் பிணைந்து கிடக்கிறது . கடல் வஞ்சித்து விடவில்லை மனுஷங்களை போல .வள்ளத்துக்காரர்களுக்கும் மீன் செய்கின்றன .ஆனால் உன்னைப் போல் இல்லை .குறைந்துவிட்டது .லாஞ்சில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை போல நிறைந்து போய் கிடக்கின்றன. சில குடும்பங்களில் ஊரைவிட்டே போய்விட்டன அந்த இயந்திரம் அவர்களை வாழ்விக்க கடலைச் சுற்றி வருகிறதா, இல்லை நசிக்க செய்ய உரிமை கொண்டு வருகிறதா என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. கடலில் மீன் இப்படி மீன் பிடிக்கும் விவசாயி அவன் ,இங்கே நிலத்தை உழுது அலை பாய்ந்து கொண்டிருக்கின்ற விவசாயிகள் இடிதாங்கி இங்கே. எனது நோக்கில் எனது தந்தையும் ஆறு ஏக்கர் நிலங்களை உழுது சாகுபடி செய்து கொண்டிருந்தார்.labour problem காரணமாக தென்னை மரங்களை நட்டு வைத்தார் ,இப்பொழுது அதைக்கூட பராமரிக்க அவர்களுக்கு உரிய வாரிசுகள் என்று விவசாயிகள் ஊரைவிட்டே சென்றுகொண்டிருக்கிறான் .அங்கே கடல்,! இங்கே நிலம் !!
30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துல்லியமாக கடப்பாடுகளை சொல்லிவிட்டார்.
ஒரு எளிய மீனவ குடும்பத்தை பற்றியதாக தொடங்குகிறது ,முடியும் தருவாயில் குடும்பம் வசிக்கும் கிராமத்தை அது அமைந்திருக்கும் கடலைப் பற்றி மாயம் இயல்பாக நிகழ்கிறது .இது கடல் புறத்தை குறித்த கதை மாத்திரமல்ல, கடலை பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும,் பழமைக்கும் புதுமைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் ,ஆணுக்கும் பெண்ணுக்கும் ,அன்பிற்கும் பகைக்கும் உடலுக்கும் உள்ளத்திற்கும், காதலுக்கும் காமத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை அவற்றில் விழுந்துவிட முடிச்சுகளை அவிழ்க்க முயன்று தோற்று குறைபாடுகளையும் குறித்து பேசுகிறது,
படித்து முடித்த பின்பு நான் இன்னும் அந்த பிலோமியுடன் அவளின் கருத்த கொழுத்த வாய் இதழ்களை பார்த்த வண்ணம்பேசிக்கொண்டே இருக்கிறேன். அது வண்ணநிலவனின் கைத்திறம்.
நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்
19 ஜூன், 2025
இன்றைய புத்தகம்
திரு கருணாமூர்த்தி Karuna Murthy எப்போதும் என்னைப் பிரமிக்கவைப்பவர். தொடர்ந்து முகநூலில் நூல் விமர்சனம்/ அறிமுகம் எழுதுபவர். அனேகமாக தினந்தோறும் ஒரு நூல் குறித்து எழுதுகிறார். இதற்காக நூல்களைப்படிக்க அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் அதை அறிமுகம் செய்யத எழுத எடுத்துக்கொள்ளும் நேரம் எல்லாம்என்னை பிரமிக்கவைக்கும் விஷயம். பலவகையான நூல்களை வாசிக்கிறார். அதை நம்முடன் முகநூலில் பகிர்ந்து கொள்கிறார். நால் அறிமுகம் என்றால் அது குறித்து அனைத்தும். அதன் பொருளடக்கம், ஆசிரியர் குறிப்பு, ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் விரிவான நீண்ட பதிவுகள் இடுபவர்.
வாசிப்போம், தமிழ்வளர்ப்போம் குழுவிலும் பல நூல்களை விமர்சித்திருக்கிறார்.
அவருடைய முக நூல் பக்கத்தில் என் கடைசிக்கோடு நூல் பற்றிய விரிவான அறிமுகத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
நூல் பற்றி மட்டுமில்லாமல் வரைபடங்கள் குறித்த மேலதிகத் தகவல்களையும் தந்திருக்கிறார். இந்த விபரங்களும் நான் அந்த நூல் எழுத ஆராய்ந்த போது சேமித்தவைகள் தான்.
ஆனால் நான் கடைசிக்கோடு நூலை அதிக பக்கங்களுடன் ஆய்வு நூலாக எழுதாமல் எளிதாக விரைவில் படிக்கக் குறிப்பாக மாணவர்கள் படிக்க வசதியாக 160 பக்கங்களுக்கு வரும்படி அமைத்திருந்தேன்.
அவருடைய அறிமுகத்தை சுட்டியில் படிக்கலாம் https://www.facebook.com/karuna.murthy.79
இது வரை கடைசிக்கோடு படிக்காதவர்கள் வாங்கிப்படியுங்கள். மின் நூலாக அமேசானில் கிடைக்கிறது. புஸ்தாகவின் மின்னூல் நூலகத்திலும் மின் நூலாகப் படிக்கலாம். அச்சுப்பிரதி வேண்டுவோருக்கும் அவர்களே அனுப்புகிறார்கள்
நன்றி: திரு ரமணன் Vsv, திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்
12 ஜூன், 2025
இன்றைய புத்தகம்
மு. குலசேகரனின் ‘தங்க நகைப் பாதை’ நாவல் பற்றிய பார்வை
“இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி பின் அதிநவீன சாலையாக மாறும் போது சுற்றியுள்ள மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இந்நாவல் விவரிக்கிறது.”
- கோமதி சுரேஷ் (முகநூல் பதிவு)
நன்றி: வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுமம்
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/p/16PiEeE4Pn/
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/Thanganagaipaathai_1475/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0DSHZ9YCD
மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0DT9NRQPX
@followers @topfans D.i. Aravindan Kannan Sundaram M Kulasekaran
11 ஜூன், 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)