மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்-உதானம்-வியானம்-ஸமானம்-அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது; அது தொண்டையிலும், மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட்செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.
உதான வாயு மார்பில் இருந்துகொண்டு, தொண்டை, மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களைத் தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.
...சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு, அவர்களின் அறிவுக்கூர்மை, மனதை ஒருமுகப் படுத்தும் ஆற்றல் மிகுந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.
தகவல்: பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தினமணிக் கதிரில் (23.9.2007) எழுதிய "அறிவுக்கூர்மைக்குப் பிராணாயாமம்!" என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் அவர்கள் & தினமணிக் கதிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக