23 அக்., 2008

என் கவிதை-6: "கூண்டுக்கிளியும், கூண்டுப்புலியும்"

கூண்டுக்கிளிக்கும்
கூண்டுப்புலிக்கும்
கல்யாணம் -
பெரியவர்களால்
நிச்சயிக்கப்பட்ட
கல்யாணம்.
ஆரம்ப முதலே
கிளிக்கு
புலியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
புலிக்கும்
கிளியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
கிளி, புலியைத்
தேர்ந்தெடுத்த
வார்த்தைகளால்
வறுத்தெடுக்க,
புலி
ஊரே அதிரும் வண்ணம்
உறும,
யார் வெல்வது?
சந்தேகமென்ன,
கிளிதான்!
கூண்டுப்புளிக்கு
யார் அஞ்சுவர்?
புலி மண்டியிட்டு
முன்னங்கால்களால்
காதைப் பொத்தி,
கண்ணை மூடி,
சாய்ந்தே விட்டது.

கருத்துகள் இல்லை: