20 அக்., 2008

கருத்துக்கள்-7: "புத்தகமும் மனிதனும்" - பழநிபாரதி

ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது ஒரு விலக்கு ஏற்றப்படுகிறது. ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு கதவு திறக்கப்படுகிறது. புத்தகம் தமிழ்ச்சொல்தான் என்கிறார் பாவாணர் என்றாலும், அதற்கு 'நூல்' என்று பெயர் வைத்த நுண்ணறிவுள்ள நம் முன்னவனை வணங்க வேண்டும். நூல் நம்மோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் உயரத்தையும், அகலத்தையும் நூல்தான் அளந்திருக்கிறது. இன்றைக்கும் காட்டப்படும் சுவர்களின் நேர்மட்டம் பார்க்க தொழிலாளர்களின் கையில் நூல்மட்டம் இருக்கிறது. நூல்தான் ஒரு காகிதத்தை பட்டமாக்கி வானத்தில் ஏற்றிவிட்டு மண்ணுக்கும் வின்னுக்குமான தொடர்பு அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. நூல்தான் எந்த ஒன்றையும் கட்டிவைக்கிறது. நூல்தான் கிழிசல்களைத் தைக்கிறது.

நூகப்படும் நூல் நிகழ்த்துகிற இந்த எல்லாச் செயல்களையும், மனிதனால் கற்கப்படும் நூலும், அவனுக்குள் நிகழ்த்துகிறது. அதனால்தான் 'புத்தகத்தைத் தொடுபவன் அதன் மூலம் மனிதனைத் டுபவனாகிறான்' என்கிறான் வால்ட் விட்மன்.

நன்றி: 'ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதன், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்" - பழநிபாரதி, நியூ செஞ்சுரியின் "உங்கள் நூலகம்", ஜூலை-ஆகஸ்ட் 2006.

கருத்துகள் இல்லை: