17 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-28: "மண்ணின் மைந்தர்கள்"

அவரைத் தாக்கரே,
இவரைத் தாக்கரே -
மும்பை மாநகர
மண்ணின் மைந்தர்காள்!
உங்கள் தினவெடுக்கும்
தோள் வலிமை
வடமாநிலத்து
கோதுமை தந்தது.

வானளாவ உயர்ந்த
வலிமையான கட்டிடத்தில்
தெளிக்கப்பட்டிருக்கிறது
தென்னிந்திய வியர்வை!

மும்பைவரும் லாரிகள்
முடக்கப்பட்டால் -
சாப்பிட உணவின்றி
மராட்டியன் மராட்டியனை
சாப்பிடவேண்டியதுதான்!

மண்ணின் மைந்தர்கள்
மறந்துவிட்ட ஒரு விஷயம்,
மராட்டியம் இருப்பது
இந்தியாவில் என்பதை.

இந்தியனாய் இல்லாமல்
மண்ணின் மைந்தனாய்
மாறிப்போனவர்களே!
எப்போது மனிதனாக
மாறப்போகிறீர்கள்?

கருத்துகள் இல்லை: