2 ஜன., 2009

இயற்கை உணவுக் குறிப்பு-4: கார அவல்"

நன்றாக கல் நீக்கி சுத்தம் செய்த அவலை நீரில் தேவையான பக்குவத்தில் ஊறவிடவும். நீர் சேர்த்த அவலுடன் தேங்காய் துருவல், வெட்டிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா சேர்க்கவும். எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்கவும். கார அவல் சாப்பிடத் தயார்.

கார அவல் தயாரிப்பது சுலபம். சத்து மிகுந்த இந்த உணவை சர்க்கரை வியாதி அன்பர்களும் அளவாகச் சாப்பிடலாம். மலச்சிக்கல் நீங்கும். பசிப்பிணி தீரும். உடல் சதை குறையும். இயற்கை நலவாழ்வு முகாம்களில் இவ்வுணவு வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: