9 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-63: "சதைச் சந்தை"

இரவிலும் நடக்கும் பங்குச் சந்தை,
இடைத்தரகர்களுக்கு இன்பச் சந்தை
"வாங்குபவனும் விற்பவளும்"
நட்டப்படும் ஒரே வியாபாரம்.

முழுவதும் காட்டினாலும்
முகம் காட்ட முடியாத இடம்
கரைவேட்டிகள் பல கசங்கிய இடம்
காக்கிச் ச்ட்டைகளுக்கோ இலவசம்

அனுபவம் விலை போகாத சந்தை
உணர்வேயில்லாமல் பெண்களும்
அறிவே இல்லாமல் ஆண்களும்
சதைகளால் சந்திக்கும் சங்கடம்

உடலை வளர்க்க
உடலையே விற்பவர் உறைவிடம்
ஒரு பசி தீர
வேறு பசி தீர்ப்பவர் பலிபீடம்

தினம் கைநனைக்க
கண் நனைப்போர் வசிப்பிடம்
விழுந்தால் எழ முடியா வழுக்குப்பாறை
தானாக விழுபவரைவிட
தள்ளி விடப்பட்டோர் தவிப்பிடம்

பெண்களை
சந்தைக்கு கொண்டு வந்த
ஆண்களை
என்ன செய்யலாம்?

அவர்கள்
ஆண்கள் என்பதற்கான
அடையாளத்தையே
அறுத்துவிடலாமா?

1 கருத்து:

kovai sathish சொன்னது…

தினம் குளித்தாலும்..என் நிழல் கருப்பாய்..!?
சுருக்கென குத்தும் பெண்மை வணங்காதவனுக்கு..!?