29 ஆக., 2009

தாயுமானவர் பாடல்-2:

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
ஆளினும் கடல்மீதினிலே
ஆணை செலவே நினைவர் அழகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.

1 கருத்து:

விஜே சொன்னது…

ஆகா! அருமையான பாடல், படிக்க கொடுத்ததற்கு நன்றி.