13 அக்., 2009

கருத்துக்கள்-15: "பூமியையே கொடுத்தாலும்..."

தமிழனை பெருமையாகப் பேசும்போது, சிலப்பதிகாரத்தில், பாண்டியன் நெடுஞ்செழியன், தன் நீதி தவறிய தீர்ப்பை உணர்ந்ததும் உயிரை விடுகிறான்; தனது மகன், பசுங்கன்றை கொன்றதற்கு தண்டனையாக, தன் மகனையே தேர் சக்கரத்தால் ஏற்றிக்கொல்கிறான் சோழ மன்னன் என்று பெருமைப்படுகிறோம்.

ஆனால், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் தலித்தாக இருப்பதால், உயர் ஜாதியினர் குற்றம் சுமத்துவதாக தி.. தலைவர் வீரமணி சொல்கிறார்.

சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதை விட்டு, ஜாதிப் பிரச்னையை கூறலாமா? அவருடைய வாதத்தையே ஏற்றாலும், தலித்துகள் ஊழல் செய்தால் தவறில்லையா? ஜாதியை, மதத்தை, மூடப்பழக்கத்தை ஒழிப்பேன் என்ற கொள்கை இதுதானா?

'நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் , ஊழல் செய்ய வேண்டியதில்லை' என்கிறார் நீதிபதி தினகரன். இந்தியாவில் பெரிய பணக்காரர் அம்பானி மகன்கள் சொத்துச் சண்டை நீதி மன்றம் வரை சென்றுள்ளது. சத்யம் ஸாஃப்ட்வேர் புகழ் ராமலிங்க ராஜு, சம்பளம் போதாமலா 8,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தார்?

பேராசை என்று வந்துவிட்டால், பூமியையே முழுவதுமாகக் கொடுத்தாலும், பக்கத்திலுள்ள துணைக்கோள் சந்திரனையும் கேட்பர். நீதிபதியானாலும், நீதியைத் தான் முழுவதும் நாட வேண்டும்.

- ரா.முத்தையா, சென்னை, 'தினமலர்', மதுரை, 8.10.2009.

நன்றி: திரு ரா.முத்தையா & தினமலர்.

முக்கிய பின்குறிப்பு:
---------------------------

இது தொடர்பாக 'இந்து' ஆங்கில நாளிதழின் (அக்டோபர் 11, 2009) முதல் பக்கத்தில் வெளியான செய்தியிலிருந்து:-

திருத்தணி தாலுகாவிலுள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் மட்டும் நீதிபதி தினகரன் அவர்கள் பெயரில் கிட்டத்தட்ட ஐந்நூறு ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையின்படி 197 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமென்றும், இதில் நான்கு வகையான அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி தினகரன் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு அவர் ஏரி, குளம் குட்டைகள், கிராமப் பொது நடைபாதைகள்
மற்றும் அவரது பட்டா நிலத்திற்கு அருகிலுள்ள பழைய கால மண்கோட்டை ஆகியவற்றை ஆக்கிரமிப்புச் செய்துள்ளார் என்பதாகும்.

பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புச் செய்யப்பட நிலத்தைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றும் முயற்சியை, அரசு அதிகாரிகள் விரைந்து சென்று முறியடித்துள்ளனர். அப்போது அவர்களிடம் நீதிபதி தினகரன் அவர்கள் பேசுவதாகக் கூறி, மொபைல் ஃபோனில் மிரட்டல் விடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நன்றி: "இந்து" நாளிதழ்.



கருத்துகள் இல்லை: