18 அக்., 2009

தீபாவளித் திருநாள்

ஸ்ரீ கொல்லன் காளி அம்மன்

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்

நேற்று தீபாவளி. நாடெங்கும் நரகாசுரர்கள். ஒரு நரகாசுரன் அழிந்தால் ஓராயிரம் நரகாசுரர்கள் முளைக்கின்றனர். விஷம்போல் ஏறி, விண்ணைத்தொட்டுவிட்ட விலைவாசி. இதில் எதைக் கொண்டாடுவது?

உற்சாகமும் கொண்டாட்டமும் குழந்தைகளுக்கு மட்டும்தான் போலிருக்கிறது. குழந்தைகளைப் பார்த்து நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

சிறுவயதிலிருந்தே எனக்கும் தீபாவளிக்கும் ஏழாம் பொருத்தம்தான். என் அம்மாவின் பாஷையில் சொல்வதானால் என் உடம்பு 'கொணக்கிரும்'. 'மூட் அவுட்' ஆகிவிடும். இந்த லட்சணத்தில் நான் பிறந்தது ஒரு தீபாவளி தினத்தன்று! நேற்றைய தீபாவளி என்னுடைய அறுபத்தொன்றாவது தீபாவளி.

நேற்று என்னமோ கொஞ்சம் பரவாயில்லை. ஸ்ரீ கொல்லன் காளி அம்மன் கோவிலுக்கும், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தேன். மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

என் வாழ்வில் இன்னும் எத்தனை தீபாவளிகள் வருமோ தெரியவில்லை. பார்க்கலாம்.

வளமிகு காடுகள் வாவென அழைக்கும்
ஆயினும் எனக்கோ ஆயிரம் கடமைகள்
துயில் கொளுமுன் முடித்திட வேண்டும்
தொலைவோ பலகல் நடந்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை: