4 நவ., 2009

இன்று படித்தவை-12: அக்டோபர் 25, 2009

2. அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது - தினமலர் வாரமலர் - அக்டோபர் 25, 2009

இதிலிருந்து ஒரு பகுதி மட்டும்.

"மனோதத்துவப் புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருந்தேன். அதில் மனதைத் தொட்ட ஐந்து பாயிண்டுகள் இதோ-

1. நீங்கள் செய்யும் வேளையில், குழந்தையின் உழைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணம், சைக்கிள் துடைத்தல்.

2. நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு எப்போதாவது அவனை அழைத்துப் போங்கள். 'உங்கள் வேலையைப் பார்த்து, அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு எல்லாம் வாங்கித்தருகிறார்...' என்று அவன் அறிந்துகொள்ளட்டும்.

3. குழந்தையிடம் அளவுக்கு மீறி செல்லம் காட்டாதீர்கள். அதே சமயம், ரொம்பவும் ஆத்திரப்படாதீர்கள்.

4. குழந்தையைக் கட்டிப் பிடித்து விளையாடுங்கள். உங்கள் உடலோடு ஒட்டிப் பழகினால் பாசம் அதிகமாகும்.

5. குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்ளும்போது அது நியாயமாக இருந்தால் விட்டுக் கொடுங்கள்."

நன்றி: திரு அந்துமணி அவர்கள் & தினமலர்.

கருத்துகள் இல்லை: